Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி… என்ன பேசப்போகிறார் தெரியுமா? | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 21, 2025
in அரசியல் செய்திகள்
0
"ஆபரேசன் சிந்துர் வெற்றியை சிவனுக்கு அர்ப்பணித்தேன்" – பிரதமர் மோடி
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 21, 2025 11:45 AM IST

PM Modi Address Today: இன்று (செப்டம்பர் 21) மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

பிரதமர் மோடிபிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை அமலுக்கு வரும் நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

விற்பனை மற்றும் சேவை வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்தது. இந்நிலையில், ஜிஎஸ்டி வரியில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு பரிசு காத்திருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 5, 12, 18, 28 என நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டியை இனி 2 அடுக்குகளாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதன்மூலம், பல்வேறு பொருட்களின் விலை குறைய உள்ளதாகவும், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் வரும் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 21) மாலை 5 மணிக்கு  நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை (செப்டம்பர் 22, 2025) முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் அமலுக்கு வர உள்ள நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி பேசுவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீர்திருத்தங்கள் வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பது பற்றிய விரிவான விளக்கங்கள் அவரது உரையில் இடம்பெறலாம். இந்த புதிய நடைமுறைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு உதவும் என்பதையும் அவர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சர்வதேச அரங்கில், அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு கொள்கைகள் மற்றும் H1B விசா தொடர்பான விதிமுறைகள் இந்தியத் தொழில்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகள் நிலவி வருகின்றன. இந்தச் சூழலில், பிரதமர் மோடி இந்த விவகாரங்கள் குறித்துப் பேசுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Delhi,Delhi,Delhi

First Published :

September 21, 2025 11:30 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

PM Modi Address Today : இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி… என்ன பேசப்போகிறார் தெரியுமா?



.

Previous Post

மேகாலயாவில் லேசான நில அதிர்வு

Next Post

செப்.23இல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்|DMK MPs meeting on September 23

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செப்.23இல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்|DMK MPs meeting on September 23

செப்.23இல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்|DMK MPs meeting on September 23

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In