Monday, November 2, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி! உடனே போன் செய்த பிரதமர் மோடி | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 2, 2025
in அரசியல் செய்திகள்
0
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மருத்துவமனையில் அனுமதி! உடனே போன் செய்த பிரதமர் மோடி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 02, 2025 2:03 PM IST

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

News18News18
News18

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பேஸ்மேக்கர் கருவி வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, திடீர் உடல்நலக் குறைவு காரணமாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்தில் லேசான பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதனை சரிசெய்ய கார்கேவுக்கு ‘பேஸ் மேக்கர்’ கருவி பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேஸ்மேக்கர் பொருத்தும் பணி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக அவரது மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே கூறியுள்ளார். மேலும் தந்தை உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் தனது வழக்கமான பணிகளுக்கு கார்கே திரும்பக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். தனது தந்தையின் நலனில் அக்கறை கொண்டு விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பிரியங்க் கார்கே தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Spoke to Kharge Ji. Enquired about his health and wished him a speedy recovery.

Praying for his continued well-being and long life.@kharge


— Narendra Modi (@narendramodi) October 2, 2025

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார். மேலும், இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “கார்கேவிடம் பேசி, அவரது உடல்நிலை குறித்து விசாரித்தேன். விரைவில் அவர் குணமடைய வாழ்த்தினேன். அவரது நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 02, 2025 2:03 PM IST



.

Previous Post

டிஜிட்டல் அரஸ்ட் மோசடியாளர்களுக்கு உதுவும் ஆதார் எண்! எப்படி?

Next Post

விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

விழுப்புரம் அருகே மூத்த தேவி சிற்பம் கண்டெடுப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In