வலிமையான கட்டமைப்பு
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவரத்னா பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) மூலம் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் பாதுகாப்பு, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் புதுமையை உறுதி செய்யும் வகையில், துருப்பிடிக்காத எஃகு வலுவூட்டல், உயர்தர பாதுகாப்பு வண்ணப்பூச்சு மற்றும் முழுமையாக பற்றவைக்கப்பட்ட இணைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கடுமையான கடல் சூழலில் நீண்ட ஆயுளை உறுதி செய்யும் வகையில் சிறப்பு பாலிசிலோக்சேன் பூச்சு அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
