Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகளிர் – குந்தைகள் நலனுக்கான தேசிய திட்டம்.. செப்.17-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 15, 2025
in அரசியல் செய்திகள்
0
79 ஆவது சுதந்திர தினம் : டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றும் பிரதமர் மோடி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 15, 2025 3:40 PM IST

சமச்சீர் உணவு, தாய்-சேய் நலம், ஊட்டச்சத்துக் குறைபாடு தடுப்பு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்

பிரதமர் மோடிபிரதமர் மோடி
பிரதமர் மோடி

மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்காக தேசிய அளவிலான திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுதினம் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுகாதார சேவைகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். அவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அணுகல், தரமான சிகிச்சை மற்றும் சுகாதார விழிப்புணர்வை அதிகரிப்பது இந்த திட்டத்தின் இலக்கு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதால், இது ஒரு புதிய உலக சாதனை படைக்கும் அளவுக்கு மிகப் பெரியதாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் அரசு மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்கள் இணைந்து செயல்பட உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர் மற்றும் பிற சுகாதார மையங்களில் 75,000 சுகாதார முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் உள்ள அங்கன்வாடிகளில் ‘ஊட்டச்சத்து மாதம்’ கொண்டாடப்படும். இதில் சமச்சீர் உணவு, தாய்-சேய் நலம், ஊட்டச்சத்துக் குறைபாடு தடுப்பு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும், குழந்தைகளுக்கு உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் வளர்ச்சி கண்காணிப்பு அமர்வுகள் நடத்தப்படும்.

ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவார் அபியான் என்ற பெயரில் இந்த திட்டம் அழைக்கப்படவுள்ளது. இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) ஒரு லட்சம் உயிருடன் பிறக்கும் குழந்தைகளுக்கு 130-இல் இருந்து 93 ஆகக் குறைந்துள்ளது. இதேபோன்று பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் (NMR) 2014-இல் 1,000 குழந்தைகளுக்கு 26-ஆக இருந்தது, 2021-இல் 19 ஆகக் குறைந்துள்ளது.

இந்த சூழலில் நாளை மறுதினம் தொடங்கப்படவுள்ள இந்தத் திட்டம் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030-க்குள் MMR-ஐ 70-க்கும் கீழும், NMR-ஐ 12-க்கும் கீழும், U5MR-ஐ 25-க்கும் கீழும் குறைப்பதே இந்த திட்டத்துடைய இலக்குகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அசாமில் நேரு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை.. பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

இந்த திட்டம் குறித்து பேசியுள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, பிரதமரின் இந்த முயற்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அவரது தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிப்பதாகக் கூறினார். இந்த மக்கள் பங்கேற்பு இயக்கத்தில் சேருமாறு அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத் துறையினரையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 15, 2025 3:40 PM IST



.

Previous Post

‘அறிஞர் அண்ணா பிறந்த நாள்..’ எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் மரியாதை செலுத்தி அஞ்சலி!

Next Post

குலதெய்வங்களின் அருளுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும்: தனுஷ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குலதெய்வங்களின் அருளுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும்: தனுஷ்

குலதெய்வங்களின் அருளுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும்: தனுஷ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In