Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஒரே நாளில் 10 வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார் மோடி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 12, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஒரே நாளில் 10 வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார் மோடி..
35
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அகமதாபாத்: சென்னை – மைசூர், மங்களூரு- திருவனந்தபுரம் உட்பட மொத்தம் 10 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து காணொளி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார். பின்னர் அவர் 85,000 கோடிக்கு மேலான ரயில் திட்டங்களை துவக்கி வைத்தார்.

பயணியர் தேவை அதிகமாக உள்ள வழித்தடங்களில் மட்டுமே, வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று துவக்கப்பட்டது. எனினும், இந்த ரயில் ஏப்ரல் 4ம் தேதி வரை சென்னை சென்ட்ரல் – பெங்களூரு இடையே மட்டும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து வாரத்தில் புதன் தவிர மற்ற நாட்களில் மாலை 5:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், அதேநாள் இரவு 9:15 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

மறுமார்க்கமாக, பெங்களூரில் இருந்து காலை 7:50க்கு புறப்படும் ரயில், அதேநாள் நண்பகல் 12:25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், காட்பாடி நிறுத்தங்களில் நின்றுசெல்லும். ஏப்.,5ம் தேதி முதல் மைசூரு – சென்னை சென்ட்ரல் இடையே வழக்கமான சேவை துவங்கும். மைசூரில் இருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு நண்பகல் 12:25க்கு வந்தடையும்.

மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5:00க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், அதேநாள் இரவு 11:20 மணிக்கு மைசூரை அடையும். இந்த ரயிலில் எட்டு பெட்டிகள் இணைக்கப்படும். டிக்கெட் முன்பதிவு விபரம் விரைவில் அறிவிக்கப்படும். சென்னையில் இருந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

10 புதிய வந்தே பாரத் ரயில்

ஒரே நாளில் சென்னை-மைசூரு, ஆமதாபாத்- மும்பை, செகந்திராபாத்- விசாகப்பட்டினம், ராஞ்சி-வாரணாசி, ஜல்பைகுரி-பாட்னா, பாட்னா-லக்னோ, லக்னோ-டேராடூன் உட்பட மொத்தம் 10 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

ரூ.11 லட்சம் கோடி திட்டங்களுக்கு அடிக்கல்

பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் இளைஞர்கள் தங்களுக்கு என்ன மாதிரியான நாடு வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். இப்பொழுது ரயில்வே துறை சிறந்த வளர்ச்சி அடைந்துள்ளது. 2024ம் ஆண்டு துவங்கி இரண்டு மாதங்களில், நாங்கள் 11 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம்.

ரயில் நிலையத்தில் துவங்கியது எனது வாழ்க்கை

எனது அடிப்படை வாழ்க்கையே ரயில் நிலையத்தில் தான் துவங்கியது. இதனால் ரயில்வே துறை முன்பு எவ்வளவு மோசமாக இருந்தது என்று எனக்குத் தெரியும். ரயில்வே மேம்பாட்டிற்கு அரசுப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே தனி ரயில்வே பட்ஜெட்டை நிறுத்திவிட்டு மத்திய பட்ஜெட்டில் சேர்த்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே மேம்பாட்டுக்காக எனது அரசு அதிக பணம் செலவிட்டுள்ளது.

தேசத்தின் முன்னேற்றம்

முந்தைய அரசு ஆட்சியில் செலவிட்ட தொகையை விட 6 மடங்கு அதிகம் ஆகும். உலகில் எங்கு வேண்டுமானாலும் நாம் பார்க்கலாம். வளர்ந்த மற்றும் பொருளாதார சக்தியாக மாறிய நாடுகளில் ரயில்வே துறை முக்கியப் பங்காற்றியிருப்பதைக் காணலாம். நாங்கள் செய்து வரும் வளர்ச்சிப் பணிகள் தேர்தல் வெற்றிக்காக அல்ல. தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மரியாதை

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதியில் உள்ள காந்தி ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தி உருவ சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

.

Previous Post

பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு : இன்றும் குழப்பத்தில் வைத்திருக்கும் அரசுகள்.

Next Post

3000 கிலோ கெட்டுப்போன பழனி கோவில் பஞ்சாமிர்தம் : வாகனத்தை சிறைபிடித்த பக்தர்கள்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
3000 கிலோ கெட்டுப்போன பழனி கோவில் பஞ்சாமிர்தம் : வாகனத்தை சிறைபிடித்த பக்தர்கள்..

3000 கிலோ கெட்டுப்போன பழனி கோவில் பஞ்சாமிர்தம் : வாகனத்தை சிறைபிடித்த பக்தர்கள்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In