Last Updated:
மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் , இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், சர்வதேச பொருளாதார சூழல் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் திறக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பிறகு, கெய்ர் ஸ்டார்மர் முதன்முறையாக இந்தியா வந்துள்ளார். மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த அவர், இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், சர்வதேச பொருளாதார சூழல் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தார்.
அதன் பிறகு பிரதமர் மோடி மற்றும் கெய்ர் ஸ்டார்மர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, இங்கிலாந்தைச் சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் திறக்கப்படும் என்று கூறினார்.
பின்னர் பேசிய இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர், கடந்த ஜூலை மாதம் கையெழுத்தான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் ஏன் தாமதமானது என விளக்கம் அளித்தார்.
The path-breaking India-UK CETA will create new job opportunities for youth, expand trade and benefit both our industries as well as consumers. In this context, PM Starmer and I discussed trade linkages and economic ties between our nations in the times to come. @Keir_Starmer pic.twitter.com/zs5obf7Hh7
— Narendra Modi (@narendramodi) October 9, 2025
காகிதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை விட, நம்பிக்கையின் அடிப்படையில், இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருவதாக ஸ்டார்மர் குறிப்பிட்டார்.
October 09, 2025 2:54 PM IST

