Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 16, 2025
in அரசியல் செய்திகள்
0
சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 16, 2025 9:11 AM IST

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று 2026 உலக சாம்பியன்ஷிப் செஸ் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றார்.

வைஷாலி செஸ்வைஷாலி செஸ்
வைஷாலி செஸ்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று தமிழ்நாடு வீராங்கனை வைஷாலி சாதனை படைத்தார்.

உஸ்பெகிஸ்தானில் கடந்த 2ஆம் தேதி முதல் செஸ் தொடர் நடைபெற்ற நிலையில் மொத்தம் 11 சுற்றுகளில் விளையாடிய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி 6 வெற்றி, 4 டிரா, 1 தோல்வி என மொத்தம் 8 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

கடந்த ஆண்டும் கிராண்ட் ஸ்விஸ் தொடரில் வைஷாலி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் 2026 உலக சாம்பியன்ஷிப் செஸ் கேண்டிடேட் தொடருக்கு வைஷாலி தகுதி பெற்றுள்ளார்.

சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிராண்ட் மாஸ்டர் வைஷாலியின் வெற்றி வெறும் தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்லாமல் சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும், உலக அரங்கில் தங்கள் கனவுகளை பிரதிபலிப்பதை காணும் எண்ணற்ற பெண்களுக்கு ஒரு கொண்டாட்டம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் வைஷாலியை பாராட்டி பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், வைஷாலியின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்; அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பு முன்மாதிரியானவை என பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 16, 2025 9:11 AM IST



.

Previous Post

சாம் கான்ஸ்டாஸ் சதம் விளாசல்; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணி!

Next Post

ஓடிடியில் மதராஸி எப்போது?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஓடிடியில் மதராஸி எப்போது?

ஓடிடியில் மதராஸி எப்போது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In