தான்சானியா நாட்டின் அதிபர் Dr.சாமிய சுளுஹு மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். குடியரசுத்தலைவர் மாளிகையில் நடந்த விருந்தில் தான்சானியா அதிபர் Dr. Samia Suluhu Hassan பேசும் போது, எங்களிடம் இருக்கும் கணக்கின்படி, தான்சானியாவில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 40 ஆயிரம் பேர் வாழ்கிறார்கள்..ஆனால் இந்தியாவின் குடியரசுத்தலைவர் 60 ஆயிரம் பேர் என்று கூறுகிறார். அது 60 ஆயிரமாகவும் இருக்கலாம் என்று தெரிவித்தார்.. இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர், வாழ்கிறார்கள் என்ற கணக்கை இந்திய வெளியுறவு அமைச்சகம் வைத்திருக்கிறது, அந்த தகவலை தவறாக கொடுத்து குடியரசுத்தலைவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
அதிகபட்சம் 6.5 கோடி மக்கள் வாழும் தான்சானியா நாட்டின் அதிபர் தன்னிடமிருக்கும் கணக்கின்படி 40 ஆயிரம் என்கிறார்.. 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவின் குடியரசு தலைவர், எங்கள் நாட்டை சேர்ந்தவர்கள் உங்கள் நாட்டில் 60 ஆயிரம் பேர் உள்ளனர் என்று கூறுகிறார். இந்நிகழ்வுகள் நமது அரசிடம் சரியான தரவுகள் உள்ளனவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

