அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை சமூக ஊடகங்களில் பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர்.
நடிகை பார்வதி, ரீமா கல்லிங்கல், திவ்யபிரபா, இயக்குநர்கள் ஜியோ பேபி, ஆஷிக் அபு, பாடகர் சூரஜ் சந்தோஷ் ஆகியோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை பதிவிட்டுள்ளனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை கூறுகிறது, இதை சுட்டிக்காட்டும் வகையில் இன்று பதிவிட்டுள்ளனர். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை பிரதமர் மோடி தொடங்கிய இன்று இதுபோல் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

