மோடியின் பதவி பறிக்கப்பட வேண்டும், விமானப்படை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியதற்காக இந்திரா காந்தியின் பதவியை அலகாபாத் உயர்நீதிமன்றம் 1975ம் ஆண்டில் பறித்தது. ஆனால் அது அந்தக் காலம். இன்று மோடியோ, அரசாங்கப் பணம், அரசாங்க அமைப்புகள், அரசாங்க அதிகாரிகள் என அரசாங்கத்தின் சகலத்தையும் தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். என்று ஆக்ரோஷமாக பிரசாந்த் பூஷன் ட்வீட் இட்டுள்ளார்.

பிரசாந்த் பூஷன் மிகச்சிறந்த மூத்த வழக்கறிஞர் பொது நலனுக்காக உச்ச நீதிமன்றத்திலும் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் பல வழக்குகளை நடத்தி வெற்றி கண்டவர் பொது நலனில் மற்றும் பொதுமக்களின் நலனிலும் அதிக ஆர்வம் உள்ளவர் அவருடைய கருத்தை பரிசீலிக்க வேண்டும்