மேலும் நீதிபதி யாதவ் கூட்டத்தில் பேசுகையில், ‘இது இந்துஸ்தான் (இந்தியா) என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை, பெரும்பான்மையினரின் (இந்துக்களின்) விருப்பப்படி இந்த நாடு செயல்படும். இதுதான் சட்டம். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தும் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கூற முடியாது. பெரும்பான்மைக்கு ஏற்ப சட்டம் செயல்படுகிறது’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
தனியார் அமைப்பான ‘நீதித்துறை பொறுப்புடைமை மற்றும் சீர்திருத்தங்களுக்கான பிரசாரம்'(சிஜேஏஆர்) அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளராக பிரஷாந்த் பூஷண், இந்த புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
