எதன் அடிப்படையில் ராஜாங்க பாஸ்போர்ட்டை ரத்து செய்யலாம்?
இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1967-ஆனது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரம் கொண்ட அரசு அமைப்பு ராஜாங்க பாஸ்போர்ட்டை ரத்துசெய்ய அனுமதிக்கிறது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு அல்லது பிற நாடுகளுடனான நட்புறவு ஆகியவற்றின் நலன்களில் இந்த நடவடிக்கை அவசியமானதாகக் கருதப்படும் வேளையில் இதை ரத்துசெய்யலாம்.

அதேபோல், இந்த பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் இதை முறைகேடாகப் பெற்றிருந்தாலோ, தவறான உடைமையில் இருந்தாலோ அதைப் பறிமுதல் செய்யலாம் அல்லது ரத்து செய்யலாம். மேலும், இந்த பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் ரத்து செய்யலாம். அதேபோல், கிரிமினல் வழக்கில் நீதிமன்றத்தின் பேரில் இதை ரத்து செய்யலாம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
