August 17, 2024, 9:10 am IST
65 ஆண்டுகால கனவு திட்டம் இன்று தொடக்கம்
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 65 ஆண்டுகால கனவு திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை காணொலி வாயிலாக முதலமைச்சர் இன்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார்.
August 17, 2024, 9:05 am IST
சதுரகிரி மலையேற தடை!
கனமழை காரணமாக சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு செல்லும் பாதையில் உள்ள ஓடைகளில் தண்ணீரில் பெருக்கெடுத்து ஓடுவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
August 17, 2024, 9:03 am IST
நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்!
மேற்கு வங்க பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தமிழ்நாட்டிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விளம்பரம்
- First Published :
