Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு செய்திகள் நேரலை
Tamil Live Breaking News : வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
நாளை மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 2 நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரைக்கு அருகில் நகரக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு மழைக்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tamil Live Breaking News : ஃபார்முலா 4 கார் ரேஸ் – இன்று விசாரணை
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் சார்பில் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Tamil Live Breaking News : லோடு ஆட்டோ கவிழ்ந்து 4 பேர் பலி
தென்காசி மாவட்டம் சுரண்டையில் லோசு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tamil Live Breaking News : மேற்குவங்கம்: பாஜக சார்பில் இன்று முழுஅடைப்பு
கொல்கத்தா பயிற்சி மருத்துவ மாணவி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து மேற்கு வங்கத்தில் பாஜக இன்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டுமென்று பாஜக வலியுறுத்தி வருகிறது.
Tamil Live Breaking News : ராமேஸ்வரம்: விசைப்படகு மீனவர்கள் அடையாள வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், கடலில் மூழ்கி காணாமல் போன 2 மீனவர்களை மீட்கக் கோரியும், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tamil Live Breaking News : அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு
புதுச்சேரியில் ஜூன்16 முதல் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி,
| யூனிட் | முந்தைய கட்டணம் | தற்போதைய கட்டணம் |
| முதல் 100 | ரூ. 2.25 | ரூ. 2.70 |
| 101 – 200 | ரூ. 3.35 | ரூ.4 |
| 200 – 300 | ரூ. 5.40 | ரூ. 6 |
| 300க்கு மேல் | ரூ. 6.80 | ரூ. 7.50 |
மேலும் தொழிற்சாலைகளுக்கு யூனிட்டுக்கு 65 முதல் 85 காசுகள் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
Tamil Live Breaking News : சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின் நிறுத்தம்
சென்னையில் இன்று மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி தாம்பரத்தில் ராஜகீழ்ப்பாக்கம் மாருதி நகர் பிரதான சாலை, ரங்கா காலனி பிரதான சாலை, நேதாஜி தெரு, காமராஜ்புரம் பிரதான சாலை, ஐயப்பா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
Tamil Live Breaking News : லண்டன் புறப்பட்டு சென்றார் அண்ணாமலை
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.
- First Published :
