ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபர் காலித் அல் – அமெரி, மலையாள நடிகர் அர்ஜூன் அசோகனின் புதிய திரைப்படத்தின் மூலம் இந்தியத் திரையுலகில் அறிமுகமாகின்றார்.
துபையைச் சேர்ந்தவர் யூடியூபர் காலித் அல் – அமெரி. இவர், நடிகர் மம்மூட்டி உள்ளிட்ட மலையாள திரையுலகின் பிரபலங்களுடன் இணைந்து வெளியிட்ட யூடியூப் விடியோக்கள் மூலம் இந்தியாவிலும் பிரபலமாக அறியப்படுகிறார்.
இந்நிலையில், அறிமுக இயக்குநர் அத்வைத் நாயர் இயக்கத்தில், நடிகர்கள் அர்ஜூன் அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர், இஷான் சௌகத் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘சாத்தா பச்சா’ எனும் புதிய படத்தின் மூலம் காலித் அல் – அமெரி மலையாள திரையுலகில் அறிமுகமாகின்றார்.
