மும்பை: துப்பாக்கி குண்டு பாய்ந்து பிரபல பாலிவுட் நடிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை நடிகர் கோவிந்தா சுத்தம் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக வெடித்ததில் காலில் குண்டு பாய்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கோவிந்தாவின் காலில் இருந்து குண்டை அகற்றி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும், நடிகர் கோவிந்தா நலமுடன் இருப்பதாக அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.
