Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாலிடெக்னிக் மாணவர்களே! இறுதி ஆண்டு அரியரா? அரசு அறிவித்த அதிரடி திட்டம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 15, 2025
in அரசியல் செய்திகள்
0
பாலிடெக்னிக் மாணவர்களே! இறுதி ஆண்டு அரியரா? அரசு அறிவித்த அதிரடி திட்டம்..
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்தும் பல்வேறு காரணங்களால் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாத சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் பெற தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்து உள்ளார். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார தேவையை அறிந்து அரசின் அனைத்து துறைகளின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. பாலிடெக்னிக் கல்லூரி பயின்று பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் தேர்ச்சி பெறாமல் நிலுவை வைத்துள்ள பாடங்களுக்கு (Arrears) தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கும்படி மாணவர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கனிவுடன் பரீசிலித்து உத்தரவிட்டுள்ளார் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்து உள்ளார். 

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்தும் பல்வேறு காரணங்களால் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாத சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் பெற ஏதுவாக அரசு எதிர்வரும் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவத் தேர்வுகளின் போது, நிலுவைப் பாடங்கள் (Arrears) தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு (Grace Chance) வழங்க முடிவெடுத்துள்ளது என்றும் அவர் கூறி உள்ளார். 

தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி, மாணவர்களின் மீது தனி அக்கறை கொண்டு உயர்கல்வித் துறையில் பல்வேறு நல திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கல்வி தரத்தை செம்மைப்படுத்தி வருவதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கூறி உள்ளார். 

ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயின்று, தகுந்த வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தொழிற்சாற் கல்வியினை வழங்கி வருகிறது.

இது குறித்த விவரங்களை https://dte.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இச்சிறப்பு வாய்ப்பினை சில பாடங்களில் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்கள் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் திரையில் வெளியான டிராகன் எனும் படத்தில் 3 மாதங்களுக்குள் 48 அரியர்களையும் தேர்ச்சி பெற வேண்டும், இல்லையெனில் வேலையும் திருமணமும் பறிபோகும் என்ற கதைக்களம் இடம்பெற்று இருந்தது. அதனை நினைவுகூறும் வகையில் பாலிடெக்னிக் பயின்று அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. 

கடந்த பிப்ரவரி 21 அன்று வெளியான தமிழ் திரைப்படமான டிராகன் வசூல் சாதனை படமாக திகழ்ந்து வருகிறது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து உள்ளார். மேலும் அனுபமா பரமேசுவரன், கயாடு லோகர், ஜார்ஜ் மரியன், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் மேனன், மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். 

.

Previous Post

கும்பமேளாவில் ஒரே மாதத்தில் படகு ஓட்டி ரூ.30 கோடி சம்பாதித்த நபர்.. அரசு கொடுத்த ஷாக் செய்தி… கதி கலங்கிய படகோட்டி…

Next Post

36 லட்சம் கிரெடிட் கார்டுகள் செயலிழப்பு… பின்னணியில் மஸ்க்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
36 லட்சம் கிரெடிட் கார்டுகள் செயலிழப்பு… பின்னணியில் மஸ்க்..!

36 லட்சம் கிரெடிட் கார்டுகள் செயலிழப்பு... பின்னணியில் மஸ்க்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In