Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

போலோ 1948 முதல் சிந்தூர் 2025 வரை.. இந்திய ராணுவம் செய்த அதிரடி ஆபரேஷன்கள் பற்றி தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 7, 2025
in அரசியல் செய்திகள்
0
போலோ 1948 முதல் சிந்தூர் 2025 வரை.. இந்திய ராணுவம் செய்த அதிரடி ஆபரேஷன்கள் பற்றி தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் தலைமையகங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 9 இலக்குகள் மீது இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த பாதுகாப்பு படையினர் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர், எந்தவித எதிர் தாக்குதலையும் சமாளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கவே பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய அவர், தீவிரவாதிகளின் உட்கட்டமைப்பை தகர்க்கவே “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார். ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மசூத் அசாரின் குடும்பத்தினரின் 10 பேர் இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. பஹவல்பூரில் உள்ள பயங்கரவாத முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மசூத் ஆசாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாடு விடுதலை அடைந்த காலம் முதல் தற்போது வரை இந்திய ராணுவம் இதுபோல் பல்வேறு ஆபரேஷன்களை நடத்தி இருக்கிறது. அது என்னென்ன என்பது குறித்து விரிவாக இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.

ஆபரேஷன் போலோ 1948 (Operation Polo):

இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைய மறுத்தது. இதனையடுத்து ஆபரேஷன் போலோ (Operation Polo) என்ற பெயரில் 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஹைதராபாத், இந்தியாவின் ஒருபகுதியாக இணைக்கப்பட்டது.

ஆபரேஷன் விஜய் 1961 (Operation Vijay): 

போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவாவை விடுதலை செய்து இந்தியாவுடன் இணைப்பதற்காக 1961 ஆம் ஆண்டு ஆபரேஷன் விஜய் (Operation Vijay) என்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் போர்ச்சுகீசியர்களிடம் இருந்து கோவா விடுதலை பெற்றதுடன் டையூ, டாமன் பகுதிகளும் இந்தியாவுடன் இணைந்தன. 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 18, டிசம்பர் 19 ஆகிய நாட்களில் மேற்கொள்ளப்பட்டது.

ஆபரேஷன் கேக்டஸ் லில்லி 1971 (Operation Cactus Lilly):

அன்றைய கிழக்கு பாகிஸ்தானை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதற்காக இந்திய விமானப் படை மேற்கொண்ட ஆபரேஷன் இது. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி முதல் டிசம்பர் 16 ஆம் தேதி வரை ஆபரேஷன் கேக்டஸ் லில்லி (Operation Cactus Lilly) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆபரேஷனின் முடிவில் கிழக்கு பாகிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து விடுதலையாகி வங்கதேசம் என்ற தனி சுதந்திர நாடு உருவானது.

ஆபரேஷன் ட்ரிடண்ட் பைத்தான் 1971 (Operations Trident, Python):

வங்கதேச விடுதலைப் போருக்கான இந்திய கடற்படையின் முதலாவது ஆபரேஷன் இது. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 4, 5 ஆகிய இருநாட்கள் இந்த ஆபரேஷனை கடற்படை மேற்கொண்டது. இந்த ஆபரேஷனின் வெற்றியைக் கொண்டாடும் வகையில்தான் கடற்படை தினமாக டிசம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆபரேஷன் மெக்டூட் 1984 (Operation Meghdoot):

ஜம்மு காஷ்மீரின் சியாச்சின் பனிமலைக்காக ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் இது. உலகின் மிக உயரமான போர்க்களம் தான் சியாச்சின் போர்முனை. 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ல் இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டு சியாச்சின் மலைப் பகுதி முழுவதையும் இந்திய ராணுவம் தக்க வைத்துக் கொண்டது.

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 1984 (Operation Blue Star):

இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ராணுவ நடவடிக்கை இது. இந்தியாவில் சீக்கியர்களுக்கான காலிஸ்தான் என்ற தனிநாடு கோரி பிந்தரன்வாலே தலைமையிலான ஆயுதப் போராட்டத்தை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை இது. சீக்கியர்களின் புனிதத் தலமான பஞ்சாப் பொற்கோவிலுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை இது. இந்த நடவடிக்கையில் பிந்தரன்வாலே மற்றும் அவரது ஆயுத குழுவினர் முற்றிலுமாக அழிக்கப்பட்டனர். இதற்கு எதிர்வினையாக, இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அவரது சீக்கியர் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பழிதீர்க்க, பல்லாயிரக்கணக்கான சீக்கியர்களை காங்கிரஸ் கட்சியினர் கொன்று குவித்த சீக்கியர் இனப்படுகொலை நிகழ்ந்தது.

ஆபரேஷன் கேக்டஸ் 1988 (Operation Cactus): 

மாலத்தீவு அதிபராக இருந்த கயூமுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது. மாலத்தீவு தொழிலதிபர் ஒருவருக்காக தமிழீழ விடுதலை கோரிய ஆயுதக் குழுக்களில் ஒரு பிரிவினர் இந்த ஆயுத கிளர்ச்சியை மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து அதிபர் கயூம் இந்தியாவின் உதவியை கோரியதால் முப்படைகளும் ஆபரேஷன் கேக்டஸ் (Operation Cactus) 1988 என்ற பெயரில் களமிறங்கி மாலத்தீவு அதிபரை காப்பாற்றின. அதேநேரத்தில் மாலத்தீவு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, இந்த முயற்சிக்காக தமிழீழ விடுதலை கோரிய ஆயுதக் குழுக்களை மாலத்தீவுக்கு அனுப்பியது ஆகியவை குறித்த சர்ச்சைகளும் இருக்கின்றன.

ஆபரேஷன் ராஜீவ் 1987 (Operation Rajeev):

ஜம்மு காஷ்மீரின் சியாச்சினில் தற்போது Bana Post என்ற அழைக்கப்படுகிற பகுதியை பாகிஸ்தானிடம் இருந்து மீட்பதற்காக கேப்டன் பனாசிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை இது. Qaid Post என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த பகுதி, ராணுவ நடவடிக்கையின் வெற்றிக்குப் பிறகு Bana Post என மாற்றப்பட்டது.

ஆபரேஷன் பவண் 1987 (Operation Pawan):

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, இந்திய ராணுவத்துக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்கு Operation Pawan 1987 முதன்மை காரணமாகவும் கூறப்படுகிறது.

ஆபரேஷன்கள் – விஜய் – சேஃப்டி சாகர் – தல்வார் (Operation Vijay 1999), (Operation Safed Sagar 1999), (Operation Talwar 1999):

பாகிஸ்தானுடனான கார்கில் யுத்தத்தின்போது முப்படைகளும் மேற்கொண்ட ஆபரேஷன்கள் இவை. பாகிஸ்தானுக்கு எதிரான இந்த யுத்தத்தில் இந்தியா வெற்றி பெற்று கார்கில் பிரதேசங்களை பாகிஸ்தானிடம் இருந்து மீட்டது.

ஆபரேஷன் பரக்கிராம் 2001 (Operation Parakram) :

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ராணுவ ஒத்திகை இது. இந்தியா- பாகிஸ்தான் முன்னரங்கில் பல்லாயிரக்கணக்கான இந்திய ராணுவர்கள் ஒன்று குவிக்கப்பட்டு நடத்தப்பட்ட போர் ஒத்திகை. ஆசிய நாடுகளில் இத்தகைய பிரம்மாண்ட போர் ஒத்திகையை இந்தியாதான் முதன் முதலாக மேற்கொண்டது.

ஆபரேஷன் பிளாக் டொர்னேடோ 2008 (Operation Black Tornado):

நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை மீதான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதலை முறியடிப்பதற்கான ஆபரேஷன் இது. தேசிய கமாண்டோ படையின் இந்த நடவடிக்கையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 9 பேர் கொல்லப்பட்டு, பிணைக் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூர் 2025 (Operation Sindoor):

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அப்பாவி பொதுமக்கள் 26 பேரை சுட்டுப் படுகொலை செய்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் இன்று அதிகாலை மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை இது.

First Published :

May 07, 2025 12:49 PM IST



.

Previous Post

பிரதமரை பாராட்டிய ரஜினி முதல் இன்று நடைபெறும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை!

Next Post

பெயரைக் கேட்டதும்.. பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள் சொன்னது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெயரைக் கேட்டதும்.. பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள் சொன்னது

பெயரைக் கேட்டதும்.. பஹல்காமில் கணவரை இழந்த பெண்கள் சொன்னது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In