கோப்புப்படம்.
தெலுங்கானாவில் உள்ள சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் தனிப்பட்ட பாதுகாப்பு காவலர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவலர் நரேஷ், மாவட்ட ஆட்சியர் ஊரில் இல்லாததால் தனது சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். காலை 11.30 மணியளவில் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என சித்திபேட்டை காவல் ஆணையர் என். சுவேதா தெரிவித்துள்ளார்.
கொலை மற்றும் தற்கொலைக்கான காரணங்களை காவல்துறையினர் விசாரித்துவரும் நிலையில் காவலர் நரேஷ் கடன் தொல்லைகளால் அவதிப்பட்டுவந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த முடிவுக்கு கடன்தொல்லை காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்,


காவல் அதிகாரி பொய் சொல்கிறார் ஒன்று அந்த காவலர் கடன் கொடுத்த நபர்களின் தொல்லையாலோ இல்லை வேறு ஏதேனும் காரணமாகவோ தற்கொலை செய்து இருக்கலாம் அது ஒரு பக்கம் இருக்கட்டும் அந்த காவலர் தற்கொலை மற்றும் கொலைகளுக்கு பயன்படுத்தியது அரசு துப்பாக்கியே அரசு துப்பாக்கியை அவர் பணி முடிந்தவுடன் அந்த காவல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் அதை காவல் அதிகாரி துப்பாக்கியும் தோட்டக்கலையும் சரி பார்த்து வாங்கிக்கொண்டு ஒப்புகை சீட்டு கொடுக்க வேண்டும் கலெக்டர் இல்லாததால் தற்கொலை செய்து கொண்ட காவலர் பணியில் இல்லை இவர் பணியில் இல்லை என்பதால் இவரிடமிருந்து அந்த துப்பாக்கியும் தோட்டாக்களையும் அந்த காவல் அதிகாரி பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது பறிமுதல் செய்து இருக்க வேண்டும் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்ல அனுமதி அளித்தது அந்த காவல் அதிகாரியின் தவறே. . இதேபோன்று அரசு துப்பாக்கிகளுக்கும் தோட்டோக்களுக்கும் பொறுப்பான காவல் அதிகாரிகளின் கவனக்குறைவால் சென்னை கேகே நகரிலும் ஒரு காவலர் தன் காதலியை சுட்டுக் கொன்றார் மற்றொரு சம்பவத்தில் சிவகங்கை மாவட்டத்தில் பாதுகாப்புக்கு சென்ற காவலர் பாதுகாக்க வேண்டிய கைதியையே தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் இதுபோன்று அரசு துப்பாக்கிகளால் கொலைகள் நடப்பது அதிகரித்து வருகிறதுதற்கொலைகளும் ஒரு பக்கம் இருக்கட்டும் அந்த காவலரின் துப்பாக்கியை பறிமுதல் செய்யாத வீட்டிற்கு துப்பாக்கியை எடுத்துச் செல்ல அனுமதி அளித்த அந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்