Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கோவை | சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிட்ட 2 பேரின் வீடுகளில் போலீஸார் சோதனை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 17, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கோவை | சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவிட்ட 2 பேரின் வீடுகளில் போலீஸார் சோதனை
19
SHARES
30
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை: சர்ச்சைக்குரிய கருத்துகள் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக, கோவையில் 2 பேரின் வீடுகளில் காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

கோவையில் கடந்த அக்டோபரில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு எண்ண ஓட்டத்தில் உள்ளவர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு, அவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை பதிவிடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கரும்புக்கடை சபா கார்டனைச் சேர்ந்த அப்துல்காதர் (27), பரத் நகரைச் சேர்ந்த சுலைமான் (28) ஆகியோர் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரது வீடுகளிலும் கரும்புக்கடை காவல்துறையினர் நேற்று அதிகாலை 6 மணிக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து செல்போன்கள், லேப்டாப்புகள், புத்தகங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணன் கூறும்போது, ‘‘சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்ட இருவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் இறுதியில் அடுத்த கட்ட நிலவரம் தெரியவரும். கோவையில் பயங்கரவாத எண்ண ஓட்டமுள்ள நபர்கள் குழுமியுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல்’’ என்றார்.

.

Tags: கரததகளகவசதனசரசசககரயபதவடடபரனபலஸரவடகளல
Previous Post

செந்தில்பாலாஜி வீடு திரும்பணும்! மாரியம்மன் கோவிலில் ஆதரவாளர்கள் மொட்டை அடித்து அங்கபிரதட்சணம்!

Next Post

IIT Madras : ஜேஇஇ தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே! ஐஐடி மெட்ராஸில் ஒரு நாள் பயிற்சி! – விவரங்கள் உள்ளே-iit madras students preparing for jee one day internship at iit madras details inside

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
IIT Madras : ஜேஇஇ தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே! ஐஐடி மெட்ராஸில் ஒரு நாள் பயிற்சி! – விவரங்கள் உள்ளே-iit madras students preparing for jee one day internship at iit madras details inside

IIT Madras : ஜேஇஇ தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே! ஐஐடி மெட்ராஸில் ஒரு நாள் பயிற்சி! - விவரங்கள் உள்ளே-iit madras students preparing for jee one day internship at iit madras details inside

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In