Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘பிகில்’, ‘தெறி’ பட நடிகரிடம் பண மோசடி: போலீஸார் விசாரணை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 7, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
‘பிகில்’, ‘தெறி’ பட நடிகரிடம் பண மோசடி: போலீஸார் விசாரணை
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: துணை நடிகரிடம் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சாலிகிராமத்தில் வசிப்பவர் ஆத்மா பேட்ரிக் (42). இவர் விஜய் நடித்த ‘பிகில்’, ‘தெறி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு அசோக் நகரைச் சேர்ந்த அனிதா சுரேஷ் மற்றும் சுரேஷ் ராமநாதன் ஆகியோர் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு நடிகர் பேட்ரிக்கிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

இதை நம்பி அவர் ரூ.53 லட்சம் முதலீடு செய்துள்ளார். அந்த பணத்தை அவர்கள் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பேட்ரிக் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் நடிகர் பேட்ரிக், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் கமல்தாஸ் மற்றும் ஆனந்த் ஆகியோரை அணுகி பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுள்ளார். இவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இருவரும் ரூ.7 லட்சம் கமிஷன் கொடுத்தால் பணத்தை திரும்பப் பெற்றுத்தர உதவுவதாக உறுதி அளித்துள்ளனர்.

இதையடுத்து முன்பணமாக அவர்களுக்கு ரூ.2.50 லட்சம் மற்றும் தனது காரையும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்களும் உறுதியளித்தபடி நடந்து கொள்ளவில்லையாம். இந்த விவகாரம் தற்போது உயர் அதிகாரிகள் வரை சென்றதால் இதுகுறித்து கே.கே.நகர் போலீஸார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

.

Tags: தறநடகரடமபகலபடபணபலஸரமசடவசரண
Previous Post

சனாதன சர்ச்சை | அமைச்சர் உதயநிதி மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வேண்டும் – ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

Next Post

9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக பொய்யைப் பரப்புகிறது – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக பொய்யைப் பரப்புகிறது - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

9 ஆண்டு கால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாஜக பொய்யைப் பரப்புகிறது - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    டுபாக்கூர் ஆசாமிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In