Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

POCSO சட்டம்: குழந்தைகளைக் காக்கும் சட்டக் கேடயம்! சட்டம் சொல்வது என்ன? – 13 | POCSO Act Explained: The Legal Shield That Protects Children in India

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 11, 2026
in அரசியல் செய்திகள்
0
POCSO சட்டம்: குழந்தைகளைக் காக்கும் சட்டக் கேடயம்! சட்டம் சொல்வது என்ன? – 13 | POCSO Act Explained: The Legal Shield That Protects Children in India
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இரவு நேரத்தில் ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை நடந்துவிட்டதாகச் செய்தி வருகிறது. உடனே, “அந்த நேரத்தில் உனக்கு என்ன வேலை வெளியே?”, “எதற்காக அந்த இடத்துக்குப் போனாய்?”, “ஏன் அவருடன் சென்றாய்?”, “ஏன் அந்த உடையை அணிந்தாய்?” என்று கேள்விகள் அணிவகுக்கின்றன.

ஆனால், அந்தக் குற்றத்தைச் செய்தவரைப் பார்த்து, “எதற்காக இந்தக் குற்றத்தைச் செய்தாய்?” என்று கேட்பவர்கள் எத்தனை பேர்?

பாதிக்கப்பட்டவரின் உடையோ, நேரமோ, இடமோ பாலியல் வன்கொடுமைக்கான நியாயம் கிடையாது. குற்றம் செய்தவர்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

குறிப்பாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பாதுகாப்பும் நீதியும் கிடைக்கவும் கொண்டுவரப்பட்டதுதான் POCSO (Protection of Children from Sexual Offences) சட்டம், 2012. பாலியல் தொல்லை, பாலியல் தாக்குதல், ஊடுருவும் பாலியல் தாக்குதல் மற்றும் குழந்தைகளை ஆபாச நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை இந்தச் சட்டம் வரையறுத்துத் தண்டனை வழங்குகிறது

*குழந்தைகளுக்குத் தனிச் சட்டம் ஏன்?*

குழந்தைகள் தங்களுக்கு நேர்ந்ததைச் சொல்லப் பயப்படலாம். என்ன நடந்தது என்றே புரியாமல் இருக்கலாம். சில நேரங்களில், குற்றம் செய்தவர் குழந்தைக்குத் தெரிந்தவராகவோ, நம்பிக்கைக்குரியவராகவோ இருக்கலாம்.

இதைக் கருத்தில் கொண்டுதான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தெளிவாக வரையறுத்து, புகார் அளிப்பது முதல் விசாரணை, மருத்துவப் பரிசோதனை, நீதிமன்ற விசாரணை வரை குழந்தைக்கு ஏற்ற பாதுகாப்புகளை POCSO சட்டம் வழங்குகிறது.

*ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள்!*

“பெண் குழந்தைகளுக்கு மட்டும்தானா இந்தச் சட்டம்?” என்று நினைக்க வேண்டாம். POCSO சட்டத்தின் பிரிவு 2(1)(d)-ன்படி, 18 வயது நிறைவடையாத ஒவ்வொருவரும் குழந்தைதான். ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும், பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை உண்டு.



.

Previous Post

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி: ‘இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் விஜய்?’- எடப்பாடி |edappadi slams tvk vijay in mla arul vignesh issue

Next Post

“நான் பேசியது தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டது”- சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் | rajmohan responds controversy about diwali murders

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“நான் பேசியது தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டது”- சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் | rajmohan responds controversy about diwali murders

"நான் பேசியது தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டது"- சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் | rajmohan responds controversy about diwali murders

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In