Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

PM Narendra Modi | மார்சேயில் தரையிறங்கியவுடன் சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 13, 2025
in அரசியல் செய்திகள்
0
PM Narendra Modi | மார்சேயில் தரையிறங்கியவுடன் சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 12, 2025 4:06 PM IST

சாவர்க்கர் 1910ல் பிரிட்டிஷ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றதை நினைவுகூர்ந்தார்.

சாவர்க்கர் - பிரதமர் மோடிசாவர்க்கர் - பிரதமர் மோடி
சாவர்க்கர் – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி கடந்த செவ்வாய்க்கிழமை பிரெஞ்சு நகரமான மார்சேயில் தரையிறங்கிய பிறகு சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்தினார்.

சாவர்க்கர் – மார்சே தொடர்பு குறித்து பிரதமர் மோடி, ”மார்சேயில் தரையிறங்கினேன். இந்தியாவின் சுதந்திரத் தேடலில், இந்த நகரம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இங்குதான் மாவீரர் வீர் சாவர்க்கர் துணிச்சலுடன் தப்பிக்க முயன்றார். மார்சேய் மக்களுக்கும், அவரை பிரிட்டிஷ் காவலில் ஒப்படைக்கக் கூடாது என்று கோரிய அக்கால பிரெஞ்சு ஆர்வலர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வீர் சாவர்க்கரின் துணிச்சல் தலைமுறைகள் கடந்தும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது!” என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் நியூஸ்எக்ஸ் அறிக்கைகளின்படி, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சாவர்க்கர் லண்டனில் கைது செய்யப்பட்டார். இந்த விசாரணைக்காக அவர் எஸ்.எஸ். மோரியா என்ற பிரிட்டிஷ் கப்பலில் இந்தியாவுக்கு அழைத்துச் வரப்பட்டார்.

அப்போது, ஜூலை 8, 1910 அன்று பிரான்சின் மார்சேய் துறைமுகத்தில் கப்பல் நின்றபோது, ​​சாவர்க்கர் தப்பி ஓடுவதற்கான வாய்ப்பை பயன்படுத்தினார். ஒரு துளை வழியாக, பிரான்சில் தஞ்சம் கோரும் நம்பிக்கையுடன், கப்பலில் இருந்து குதித்து கரைக்கு நீந்தினார். இருப்பினும், அவர் முழுமையாகத் தப்பிப்பதற்கு முன்பே, அவர் பிரெஞ்சு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, ஆங்கிலேயர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டார்.

அரசியல் புகலிடம் கோருபவர்களைப் பாதுகாக்கும் சர்வதேச சட்டங்கள் இருந்தபோதிலும், இந்த சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே ஒரு மோதலைத் தூண்டியது. பிரெஞ்சு மண்ணில் பிரிட்டிஷ் படைகள் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக பல பிரெஞ்சு ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர், மேலும் சாவர்க்கரை திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது என்று வாதிட்டனர்.

Landed in Marseille. In India’s quest for freedom, this city holds special significance. It was here that the great Veer Savarkar attempted a courageous escape. I also want to thank the people of Marseille and the French activists of that time who demanded that he not be handed…


— Narendra Modi (@narendramodi) February 11, 2025

இந்த வழக்கு ஹேக்கில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றத்தை கூட அடைந்தது, ஆனால் இறுதியில், சாவர்க்கர் பிரிட்டிஷ் காவலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, பின்னர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரதமர் மோடி மார்சேயில் ஒரு புதிய இந்திய தூதரகத்தைத் திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

February 12, 2025 4:06 PM IST



.

Previous Post

“செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வேன் எனச் சொன்னால்..!” – உச்ச நீதிமன்றம் சொன்னதென்ன? / If Senthil Balaji says he will continue as minister, we will speed up the trial: Judges

Next Post

Gaza மக்களை வெளியேற்ற விடமாட்டோம் – Trumpக்கு எதிராக திரண்ட Arab States | Decode

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Gaza மக்களை வெளியேற்ற விடமாட்டோம் – Trumpக்கு எதிராக திரண்ட Arab States | Decode

Gaza மக்களை வெளியேற்ற விடமாட்டோம் - Trumpக்கு எதிராக திரண்ட Arab States | Decode

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In