வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
போபால்: ”மோடியின் வாக்குறுதிகள் முன் காங்கிரசின் பொய் வாக்குறுதிகள் எடுபடாது” என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் பேதுல் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பாஜ., மீது மத்திய பிரதேச மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவு நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ளனர். மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான எனது கடைசி தேர்தல் பிரசாரம் இதுவாகும். ஏனெனில் தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது. நாளை(நவ.,15) சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சாமுண்டாவின் பிறந்த நாளை கொண்டாட ஜார்க்கண்ட் மாநிலத்திற்குச் செல்கிறேன்.
மோடியின் வாக்குறுதிகள் முன் தனது பொய் வாக்குறுதிகள் எடுபடாது என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வது, ராமர் கோயில் கட்டுவது ஆகியவற்றை செய்ய முடியாது என காங்கிரஸ் நினைத்தது. ஆனால் பாஜ., செய்து காட்டியது. சில காங்கிரஸ் தலைவர்கள் வீட்டிலேயே அமர்ந்திருக்கிறார்கள். வெளியே செல்லவே மனமில்லை. மக்களிடம் என்ன பேச என்று அவர்களுக்கு தெரியவில்லை.
பழங்குடியினர் நலனுக்காக காங்கிரஸ் எதும் செய்யவில்லை. நவம்பர் 17ம் தேதி நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் நடவடிக்கை அம்பலமாகி வருகிறது. காங்கிரசின் உள்ளங்கைக்கு திருடவும், கொள்ளையடிக்கவும் தெரியும் என்பதை நீங்கள் (மக்கள்) நினைவில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அழிவைக் கொண்டு வரும் என்பது மக்களுக்கு தெரியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

