2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை முழுவதுமாக இந்தியாவில் இருந்து நீக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சமீபத்தில் 100 நாள் பிரச்சாரம் ஒன்று இது சம்பந்தமாக நடத்தப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 7.19 லட்சம் காச நோயாளிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் 2.85 லட்சம் நோயாளிகளுக்கு எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமல் இருந்துள்ளது. இந்த எண்கள் வெறும் புள்ளி விவரங்கள் மட்டும் கிடையாது. இந்த மோசமான தொற்று தங்களுக்கு இருப்பது கூட தெரியாத நபர்களின் நெஞ்சை உருக்கும் கதைகள். இதன் காரணமாக தற்போது காச நோய்க்கு இந்தியாவில் அதிக கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் செய்தி: TBயை நீக்குவது என்பது ஒரு தனிநபர் முயற்சி கிடையாது. இது ஒரு குழு சார்ந்த முயற்சி. அடிப்படையில் பிரதமர் மோடி அவர்கள் வழங்கிய செய்தி இதுதான். இந்தியாவால் காச நோயை மருந்து மூலமாக மட்டும் குணப்படுத்த முடியாது. இதற்கு மக்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது என்று கூறினார். இந்த பிரச்சாரத்தின் போது பங்குபெற்ற ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய Ni-kshay மித்ராக்களுக்கு பாராட்டுக்களை வழங்கினார்.
இவர்கள் பொதுமக்கள், நிறுவனங்கள் போன்ற தன்னார்வலர்கள் ஆவர். காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவது, உணர்வுபூர்வமான உதவி அளிப்பது போன்றவற்றை செய்து வருகின்றனர். எனவே ஒரு பொது ஆரோக்கிய பிரச்சாரம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த மாதிரி என்பதை பிரதமர் மோடி சுட்டி காட்டினார். போர்டு ரூம்களில் ஒரு அறைக்குள் நடைபெறாமல் மக்களை மையமாக வைத்து நடத்தப்பட வேண்டும் என்பதே அவருடைய கருத்தாக இருந்தது.
இந்த 100 நாள் TB முக்த் பாரத் அபியான் பிரச்சாரத்தின் போது, TN ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்ட 12.97 கோடி நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 7 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு TB நோய் இருப்பது தெரிய வந்தது. எனினும் இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால் எக்கச்சக்கமான உயிர்களை நிச்சயமாக காப்பாற்ற முடியும். ஏற்கனவே கூறியது போல, இதில் 2.85 லட்சம் நபர்களுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் அமைதியாக அவர்கள் நோய்களை பிறருக்கு பரப்பி வருவது தெரிய வந்தது.
காச நோய்க்கும் சுகாதாரத்திற்கும் என்ன தொடர்பு?
TB என்பது காற்று மூலமாக பரவும் ஒரு நோயாகும். சுகாதாரமற்ற சூழலில் வாழ்வது, அதிலும் குறிப்பாக அதிக கூட்டம் நிறைந்த காற்றோட்டம் இல்லாத பகுதிகளில் வாழ்பவர்களுக்கு TB எளிதில் தொற்றக் கூடும். கட்டுமானம், சுரங்கம் மற்றும் டெக்ஸ்டைல் பிரிவுகளில் வாழ்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே எப்பொழுதும் நம்முடைய சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்து, போதுமான காற்றோட்டம் பெறுவதை உறுதி செய்து செய்வதன் மூலமாக TB -க்கு எதிரான பாதுகாப்பு அடுக்கை நாம் உருவாக்கலாம். மேலும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட 2024 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, 2015 ஆம் ஆண்டில் ஒவ்வொரு ஒரு லட்சம் நபர்களில் 237 நபர்களுக்கு TB இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதுவே 2023 ஆம் ஆண்டில் இது 195 ஆக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் காசநோய் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கையும் 21 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும் இன்னும் லட்சக்கணக்கான நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது வருத்தமளிக்க கூடியதாக அமைகிறது.
May 28, 2025 11:00 AM IST
