Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி காந்திநகரில் நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, இந்தியா அமைதியையே விரும்புவதாகவும், சவால் விடுக்கப்பட்டால் உரிய பதில் நடவடிக்கை இருக்கும் என தெரிவித்தார்.
“எவ்வளவு லாபம் வந்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்க மாட்டோம் என கூற வேண்டும்” என்று வியாபாரிகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியா அமைதியையே விரும்புவதாகவும் ஆனால் அதற்கு ஊறுவிளைவிக்கும் விதமாக செயல்பட்டால் உரிய பதில் நடவடிக்கை இருக்கும் என சிந்தூர் ஆபரேசனை சுட்டிக்காட்டினார்.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் கொடி போர்த்தப்பட்டதாகத் தெரிவித்த பிரதமர், பாகிஸ்தான் நாட்டு ராணுவத்தினரும் பயங்கரவாதிகளின் உடல்களுக்கு மரியாதை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “நாள்தோறும் எத்தனை வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறீர்கள் என மக்கள் கணக்கெடுக்க வேண்டும்; எவ்வளவு லாபம் வந்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்க மாட்டோம் என வியாபாரிகள் கூற வேண்டும்; ஆபரேஷன் சிந்தூர் அடுத்தக்கட்டம் நோக்கிச் செல்ல மக்களின் வலிமை தேவை எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
“லாபம் வந்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்க மாட்டோம் என கூறுங்கள்” – வியாபாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்


