Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

டில்லியில் பொங்கல் விழா கொண்டாடினார் பிரதமர் மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 14, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
டில்லியில் பொங்கல் விழா கொண்டாடினார் பிரதமர் மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுடில்லி: புதுடில்லியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் இன்று( ஜன.,14) நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவில் தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, இணையமைச்சர் எல்.முருகன், டில்லியில் தனது வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார். இந்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முருகன் வீடு, கரும்பு, மஞ்சள், வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. வீட்டின் முன்பு பசுமாடும், ஜல்லிக்கட்டு காளையும் கட்டப்பட்டு இருந்தது.

இந்த விழாவில் பிரதமர் மோடி வேட்டி, சட்டையுடன் தமிழர்களின் பாரம்பரிய உடையுடன் பங்கேற்றார். தொடர்ந்து, பானையில் மோடி பொங்கல் இட்டார்.

latest tamil news

தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

விளைவித்த நெல்மணிகளை பொங்கலின் போது இறைவனுக்கு படைப்பது பாரம்பரியமானது. நமது ஒவ்வொரு பண்டிகைகளும் விவசாயிகளுடன் தொடர்புடையவை. தமிழ் பெண்கள் வீடுகளில் போடும் வண்ணக் கோலங்களில் பெரிய மகத்துவம் மறைந்துள்ளது. பல புள்ளிகள் இணைந்து கோலமாவது போல் பல தரப்பினர் இணைந்ததால் நாடு அழகாகிறது.

பலதரப்பட்ட மக்களை இணைக்கும் பணியைத் தான் காசி தமிழ்ச்சங்கம் செய்கின்றன. சிறுதானியங்களை கொண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இளைஞர்கள் உருவாக்குகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

திருக்குறள் வாசித்தார்

“தள்ளா விளையும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு”

என்ற திருக்குறளை பிரதமர் மோடி மேற்கோள்காட்டினார்.

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என தமிழில் பிரதமர் மோடி கூறினார்.

பங்கேற்றவர்கள்

இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ., சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜ தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில செயலாளர் விஜோஜ் பி செல்வம், உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் நடிகை மீனா மற்றும் தொழில் அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்



.

Previous Post

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

Next Post

காங்கிரஸின் நடைபயணம் துவங்குவதில் தாமதம்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காங்கிரஸின் நடைபயணம் துவங்குவதில் தாமதம்?

காங்கிரஸின் நடைபயணம் துவங்குவதில் தாமதம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In