பிறந்தநாளையொட்டி விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில்,” என்னுடைய உடல்நலம் குறித்த வந்ததிகளை யாரும் நம்பவேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் எனது பிறந்தநாளில் நாளை (25.08.2023) காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் நேரில் சந்திக்கவுள்ளேன். என்னைச் சந்திக்க வரும் கழக தொண்டர்கள் யாரும் பொக்கே, சால்வை, மாலை, போன்ற அன்பளிப்புகளை தவிர்க்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
விஜயகாந்த் அறிவிப்பால் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் குஷியில் உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த்தை பார்க்க இருப்பதால் சென்னைக்கு தொண்டர்கள் வர ஆயத்தமாகி வருகின்றனர்.

