மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தனித்து 132 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டு வார இழுபறிக்கு பிறகு நாளை புதிய அரசு பதவியேற்க இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியில் வந்த உடன் துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் டெல்லி சென்றனர். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அதிகார பகிர்வு பேச்சுவார்த்தை நடந்தது.
இப்பேச்சுவார்த்தையில் நடந்த சம்பவங்கள் குறித்து பெயர் சொல்ல விரும்பாத பா.ஜ.க தலைவர் சில விபரங்களை தெரிவித்துள்ளார். கடந்த 28-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில், ஆரம்பத்தில் ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று தெரிவித்தார். மக்களவை தேர்தலுக்கு பிறகு, `சட்டமன்ற தேர்தலில் மஹாயுதி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்றால் தொடர்ந்து என்னை முதல்வராக வைத்திருப்பதாக வாக்குறுதி கொடுத்தீர்களே…” என்று ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க தலைவர்களிடம் நினைவுபடுத்தி இருக்கிறார்.
