Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் மற்றும் முந்திரிக் கொட்டைகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 11, 2025
in அரசியல் செய்திகள்
0
தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் மற்றும் முந்திரிக் கொட்டைகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கடந்த 24-ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் லைபீரியா சரக்குக் கப்பல் மூழ்கியது. இந்நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியான அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் தெற்கு கடற்கரை ஓரங்களில் சாக்கு மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளன. இவற்றை 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சேகரித்து அப்புறப்படுத்தி வருகின்றனர். தனுஷ்கோடி தெற்கு கடல் பகுதியில் தொடர்ந்து கரை ஒதுங்கும் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மற்றும் முந்திரிக் கொட்டைகள், பிளாஸ்டிக் மூலப்பொருட்களைச் சேகரிக்கும் பணியில் 150 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தெற்கு கடல் பகுதியில் மீன் பிடிக்கவும் மீனவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடந்த மாதம் 24-ம் தேதி விபத்தில் சிக்கிய எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்குக் கப்பல் முழுமையாக கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் கப்பல் கேப்டன் உள்பட 24 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், கப்பலில் இருந்த 640 கண்டெய்னர்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் கடலில் விழுந்து மிதந்து கேரளா மற்றும் கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்கிய நிலையில், கடல் நீரோட்டத்தில் சில பொருட்கள் கேரள, கன்னியாகுமரி கடல் பகுதியில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்கு நேற்று முதல் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியான அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி பழைய தேவாலயம், பச்சப்பட்டி, ஒத்ததாளை, இரட்டைதாளை, முகந்தராயர் சத்திரம், கோதண்டராமர் கோவில் உள்ளிட்ட சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் தெற்கு கடற்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் சாக்கு மூடைகள் கரை ஒதுங்கி, அதில் இருந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் அலையில் கரை ஒதுங்கியுள்ளது.

இதனிடையே தனுஷ்கோடி பழைய தேவாலயத்தின் பின்புறம் கடற்கரையில் இருந்து கோதண்டராமர் கோயில் வரை உள்ள தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முந்திரிக் கொட்டைகள் ஓடு நீக்கப்படாத நிலையில் கரை ஓரங்களில் சிதறிக் கிடக்கின்றன.

கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மற்றும் முந்திரிக் கொட்டைகளைக் கடற்கரையில் இருந்து அகற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவின் பேரில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை ஓரமாக கரை ஒதுங்கிச் சிதறிக் கிடக்கும் ரசாயன மூலப்பொருட்கள் மற்றும் முந்திரிக் கொட்டைகளை பரமக்குடி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய மூன்று நகராட்சிகளுக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் 150 பேர் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய கடலோரக் காவல் படை வீரர்கள், பேரிடர் மேலாண்மைத் தன்னார்வலர்கள், மீன்வளத் துறையினர், திடக்கழிவு மேலாண்மை ஊழியர்கள், வனத்துறைத் தன்னார்வலர்கள் ஆகியோர் அரிச்சல்முனை முதல் கோதண்டராமர் கோயில் வரை கடற்கரை ஓரமாக கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மற்றும் முந்திரிக் கொட்டைகளைச் சேகரிக்கும் பணி மாசு கட்டுப்பாட்டுத் துறை அலுவலரின் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

சேகரிப்பில் ஈடுபட்டு வருபவர்களுக்குக் கை உறை, சேகரிக்கத் தட்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் சாக்குப் பைகளில் சேகரித்து திடக்கழிவு மேலாண்மை நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுப் பத்திரமாக வைக்கப்படுகிறது.

பின்னர் தமிழ்நாடு, கேரள அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் மூலப்பொருள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வழிகாட்டுதலின் படி பிளாஸ்டிக் மூலப்பொருட்களை என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்யப்படும் என ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தனுஷ்கோடி பகுதியில் கரை ஒதுங்கும் பிளாஸ்டிக் மூலப்பொருள்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற உள்ளதால், நாட்டுப்படகுகள் மற்றும் கரையோர மீனவர்கள் தெற்கு கடல் பகுதியில் மீன் பிடிக்கக் கூடாது என ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களாக தெற்கு கடல் பகுதியில் நாட்டுப்படகு மற்றும் கரையோர மீன் பிடிப்பில் ஈடுபடும் சிறு தொழில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

இதனிடையே மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் கடற்கரை ஓரம் ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் மூலப்பொருட்கள், முந்திரிக் கொட்டைகள் மற்றும் கடற்கரை ஓரம் ஒரு சில இடங்களில் செத்துக் கிடக்கும் சிறிய வகை மீன்கள் உள்ளிட்டவற்றை ஆய்வுக்காக எடுத்துச் சென்று மண்டபத்தில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு சில பிளாஸ்டிக் மூலப்பொருட்களை கொச்சியில் உள்ள தலைமை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு, தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளா அருகே நடுக்கடலில் மூழ்கிய சரக்குக் கப்பலில் இருந்து கடலில் விழுந்த கண்டெய்னர்களில் இருந்து வெளியானதாக நம்பப்படும் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் மற்றும் முந்திரிக் கொட்டைகள் தனுஷ்கோடி கடல் பகுதியில் கரை ஒதுங்கி வருகின்றது.

அதனைச் சேகரிக்க 150 தூய்மைப் பணியாளர்களை ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை, பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் விரைந்து கடற்கரை விரைவில் சுத்தம் செய்யப்படும் என ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

தனுஷ்கோடி தெற்கு கடற்கரை முழுவதும் கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் மூலப்பொருட்களைப் பார்ப்பதற்கு ஜவ்வரிசி போல் உள்ளதால், தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணி மற்றும் பொதுமக்கள் யாரும் அதனை எடுத்துச் சாப்பிடக் கூடாது என்ற விழிப்புணர்வுப் பாததைகள் வைக்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் வாழும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கரை ஒதுங்கி வரும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களால் பல்லுயிர்ப் பெருக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படுமா? மீன்கள் இனப்பெருக்கக் காலம் என்பதால் மீன் இனப்பெருக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படுமா என மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடத்தி உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மீனவ சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First Published :

June 11, 2025 6:04 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

கேரளாவில் மூழ்கிய கப்பல்.. தனுஷ்கோடியில் கரை ஒதுங்கும் பொருள்கள்.. தூய்மை படுத்தும் பணியில் பணியாளர்கள்!



.

Previous Post

அமைதிப் பேச்சுவார்த்தை முடக்கம்.. கார்கிவ் நகரில் ரஷ்யா அதிரடி தாக்குதல்.. அச்சத்தில் மக்கள்

Next Post

'நீங்களும் ஓ.சியாத்தேன் ஏறிப்போகப்போறீங்க’: ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் சர்ச்சைப் பேச்சு.. கண்டித்த அண்ணாமலை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'நீங்களும் ஓ.சியாத்தேன் ஏறிப்போகப்போறீங்க’: ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் சர்ச்சைப் பேச்சு.. கண்டித்த அண்ணாமலை!

'நீங்களும் ஓ.சியாத்தேன் ஏறிப்போகப்போறீங்க’: ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் சர்ச்சைப் பேச்சு.. கண்டித்த அண்ணாமலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In