Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 4, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
முறையாக சமைக்காத இறைச்சியிலிருந்து
பரவும் ஜிபிஎஸ்: மருத்துவா்கள் எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை தொழில்ரீதியில் சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை விதித்து, மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) உத்தரவிட்டுள்ளது.

நோயாளிகள் நலன் மற்றும் மருத்துவத் தொழிலில் நெறிமுறைகளை உறுதி செய்யும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு மற்றும் மேலாண்மையைக் கண்காணிக்கும் அமைப்பாகும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் டிஜிஹெச்எஸ் அண்மையில் அனுப்பிய உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவமனை வளாகங்களுக்குள் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையே மீண்டும் ஒருமுறை அறிவுறுத்துகிறோம். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மருத்துவமனை தலைவா்கள் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இது தொடா்பாக இயக்குநரகத்துக்கு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவா்களைச் சந்தித்துப் பேசி, தங்கள் நிறுவன மருந்துகளைப் பரிந்துரைக்கச் செய்யும் செயலில் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேநேரம், மருத்துவமனை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டால், மின்னஞ்சல் அல்லது இதர எண்ம ஊடகங்கள் வாயிலாக மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் தகவல்களைப் பகிரலாம் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



.

Previous Post

Germany ஐ வீழ்த்தி GDPல் 3rd Place செல்கிறதா India? Modi அரசு சொல்லும் கணக்கு? – Jothi Sivagnanam

Next Post

“புதுச்சேரி அரசு மதுபானங்களின் விலை உயர்வு; மதுபானக் கொள்முதல் கழகம் வேண்டும்” – அதிமுக செயலாளர் அன்பழகன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“புதுச்சேரி அரசு மதுபானங்களின் விலை உயர்வு; மதுபானக் கொள்முதல் கழகம் வேண்டும்” – அதிமுக செயலாளர் அன்பழகன்

"புதுச்சேரி அரசு மதுபானங்களின் விலை உயர்வு; மதுபானக் கொள்முதல் கழகம் வேண்டும்" - அதிமுக செயலாளர் அன்பழகன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In