கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் வட்டாட்சியர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர் ஆகியோர்கள் இணையதளம் வழியாக வழங்கப்படும் அனைத்து சான்றுகளையும் வழங்க பணம் பிடிங்கி ரவுடிகளிடம் கணினி ஐடி வழங்கி பொதுமக்களிடம் செல்ஃபோன் மூலம் அழைத்து மிரட்டி லஞ்சம் பெரும் நூதன முறையில் பொதுமக்களை அலகழிக்கும் வினோத போக்கை கண்டு கொள்ளாமல் இருக்கிறார் ஆட்சிதலைவர் என்று அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

மேலும் பூர்வீக சொத்துகளுக்கு தொடர்பு பத்திரம் வேண்டும் அல்லது மூல பத்திரம் தேவை என்று போகாத ஊருக்கு வழி சொல்லுவது போல் லஞ்சம் பெறுவதற்க்காக தள்ளுபடி செய்வது தி.கீரனூர் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகனுக்கு வாடிக்கையாகி விட்டது என்றும் புலம்புகின்றனர்.
மேற்படி ஆதி திராவிட மக்களுக்கு 35 ஆண்டுகள் முன்பாக ஒப்படை வாங்கி வீடு கட்டி வாழ்ந்து வரும் மனைக்கு நத்தம் வீட்டு மனைக்கு தூய அடங்கல் படி ,புல உட்பிரிவு,UDR அ, பதிவேடு, புதிய புல எண் ஒப்படைக்கான இனைவழி பட்டாவிக்கு மூடத்தனமாக மெய்தன்மை வழங்க முடியாது என்று பொதுமக்களை அலகழிக்கபது, மேற்படி கிராம நிர்வாக அலுவலர் பணிபுரியும் கிராமத்திலே குடியிருக்க வேண்டும் என்பதை வட்டாட்சியர் உறுதிபடுத்வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு இருக்கையில் ஆணைக்கு எதிராக ஒரு கிராம நிர்வாக அலுவலர்க்கு ஐந்து கிராமத்து மேலாக பொருப்பு வழங்கி பணம் பார்க்கும் ஏஜெண்டாக செயல் படும் வட்டாட்சியர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்வாரா என பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.
