விஜய் நடித்த நண்பன் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரமான கொசக்சி பசபுகழுக்கு உத்வேகம் தந்தவர் சோனம் வாங்சுக். இவர் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் பழங்குடியின மக்களின் கலாச்சாரம் மொழி ஆகியவற்றை பாதுகாத்து வருபவர். இதற்காக இவர் பல உயரிய நிறுவனங்களால் விருது பெற்றுள்ளார், அதில் ஐநாவின் உயரிய விருதும் அடங்கும். ஆசியாவின் நோபல் விருதான ராமன் மகசேசே விருதும் பெற்றவர் ஆவார்.
இவர் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டியும், லடாக்கின் இயற்கை வளங்களான காடுகள், மலைகள், சுரங்கங்கள், சுத்தமான நன்னீர் ஏரிகள், மிகவும் அழிவு நிலையில் உள்ள அரிய காட்டு விலங்குகள் போன்றவற்றை தனியார்க்கு தாரை வார்ப்பதிலிருந்து தடுத்து அங்குள்ள இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாக்கவும், லடாக் யூனியன் பிரதேசத்தை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்த்து லடாக்கில் உள்ள மலை வாழ் ஆதிவாசிகளின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் மொழியையும் பாதுகாக்க வேண்டி 21 நாள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆளும் பாஜக கட்சி ஜம்மு காஷ்மீரை பிரித்து சரத்து 370 கேன்சல் செய்ததை அடுத்து ஜம்மு காஷ்மீர் லடாக் என்று இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. லடாக் மாநிலத்தில் யூனியன் பிரதேசம் ஆகையால் அங்கு சட்டசபை இல்லை. ஆனால் ஒரே ஒரு லோக்சபா எம்பி மற்றும் உள்ளது.
2019 மற்றும் 2020 வருடங்களில் பாஜக தேர்தல் வாக்குறுதியாக லடாக்கை அரசியல் அமைப்பின் ஆறாவது அட்டவணையில் இணைத்து அதற்கு முழு மலைவாழ் மக்களின் அங்கீகாரத்தை கொடுத்து அங்குள்ள காடுகள் இயற்கை வளங்கள் அனைத்தும் அங்குள்ள மக்களை கொண்டே சட்டம் இயற்றி நிர்வகிக்கப்படும் என்று கூறியது. ஆனால் இன்றுவரை நட க்கவில்லை. 2022 ஆம் வருடம் கூட உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக வந்து லடாக் மக்களுக்கு ஆறாவது அட்டவணை வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றி தருகிறேன் என்று கூறினார். ஆனால் தேர்தலுக்குப் பிறகு பாஜக விடமிருந்து எந்த ஒரு தகவலும் இல்லை. லடாக்கிற்கு ஆறாவது அட்டவணை கொடுக்கவில்லை என்றால் அங்குள்ள காடுகள் தனியார் வசமாகும், அங்குள்ள கனிமவள சுரங்கள் தனியாருக்கு ஏலம் விடப்படும். இதனால் மிகவும் நாசுக்கான லடாக்கின் இயற்கை மலை அமைப்பு பாதிப்புக்கு உள்ளாகும். அது அங்குள்ள அரிய வகை காட்டு விலங்குகள் மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் கலாச்சாரத்தை பாதிக்கும்.
அவரது உண்ணாவிரதம் இன்றோடு 10 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.இவருடன் 125க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் உண்ணாவிரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அங்கு வெப்பநிலை மைனஸில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் தோன்றிய அந்த வித்தியாசமான கதாபாத்திரத்தின் நிஜ வடிவமாக லடாக்கில் வாழ்ந்து வருகிறார் சோனம் வாங்சுக் என்னும் நிஜமான இந்திய தேச பக்தர்..முறையான பள்ளியில் சேரும் வாய்ப்பு கிட்டாததில் 9 வயது வரை பள்ளிப்பக்கமே தலைவைக்காத சோனம் வாங்சுக், தன் தாயிடமே தாய்மொழி வாயிலாக வாழ்க்கைப் பாடத்தை பயின்றார். அதன் பின்னர் பள்ளியில் சேர்ந்த போதும், மொழிப் பிரச்சினை காரணமாக பலரின் தூற்றுதல்களுக்கு ஆளானார்.
பின்னர் சரியான ஆசிரியரின் அரவணைப்பு காரணமாக சிறந்த மாணவராக பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விகளை முடித்தார்.உச்ச மதிப்பெண்களை பெற்றிருந்தபோதும், நண்பன் திரைப்பட கிளைமாக்ஸ் காட்சி பாணியில் லடாக்கில் வித்தியாசமான பள்ளியை ஆரம்பித்து குழந்தைகளை வளர்த்தெடுத்தார்.பள்ளிகளின் கற்றல் – கற்பித்தல் செயல்படுகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்து அவரது சமூக சேவை பிரபலமானதில், மத்திய மாநில அரசுகள் அவரிடம் ஆலோசனை கேட்கும் அளவுக்கு உயர்ந்தார்.
இன்னமும் லடாக் பகுதியின் கல்வி, சுற்றுச்சூழல் சார்ந்து களமாடி வரும் சோனம் வாங்சுக், அதே நோக்கத்தில் தற்போது 21 நாள் உண்ணாவிரத்தில் குதித்துள்ளார்.ஆறாவது அட்டவணையை அமல்படுத்தி லடாக் பிராந்தியத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும் வரை பலகட்ட உண்ணாவிரதம் உட்பட போராட்டங்களை சோனம் வாங்சுக் தொடங்கியுள்ளார்.
மகாத்மா காந்தியின் கொள்கைகளில் பெருவிருப்பம் கொண்ட வான்சுக், காந்தி மேற்கொண்ட 21 நாள் நீண்ட உண்ணாவிரத்தை முதல் கட்டமாக தொடங்கியிருக்கிறார்.உள்ளூரை சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் இணைந்து, மைனஸ் 16 டிகிரி செல்சியஸ் கொல்லும் குளிரில் லேவின் என்டிஎஸ் மைதானத்தில் வாங்சுக் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்.
அமைதியான இந்த உண்ணாவிரத போராட்டத்தை சக இந்தியர்கள் மத்தியில் சென்று சேர்ப்பதற்காக, இன்றைய தினம் தனது உண்ணாவிரத போராட்டம் 10ஆவது நாளை எட்டியிருப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
சோனம் வாங்சுக்கின் புதிய உண்ணாவிரத போராட்டம், அவரது சமூக ஊடகப் பதிவுகளை அடுத்தே பெரும் கவன ஈர்ப்பை பெற்றுள்ளது.இவரது கோரிக்கைகளை அரசு உடனடியாக கேட்டு, அவர் உண்ணாவிரதம் கடைபிடித்தே இறப்பதை தடுக்க அரசு முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மத்திய அரசை கேட்டுக்கொள்கின்றனர்.


கமெண்ட்ஸ் செய்வதற்கு ஒன்றுமில்லை