இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல ஜஸ்பிரித் பும்ராவை அமைதியாக்கும் வழியை ஆஸ்திரேலிய அணி கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இடம்பெற்றுள்ள இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
