இதில் 4 பயணிகள் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே காவல் துறை தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூருக்கு் அம்ரிஸ்தர் மெயில் ரயில் இன்று காலை புறப்பட்டது.
ஷாஜகான்பூர் நோக்கிச் சென்ற ரயில், மிரான்பூர் கத்ரா – ஃபதேகஞ்ச் நகர்களுக்கு இடைப்பட்ட பாலத்தைக் கடக்கும்போது, பொதுப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பானிலிருந்து புகை வெளியேறியது.
இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். சிலர் ரயிலில் இருந்த சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த முயன்றனர். அதற்குள் சில பயணிகள் அச்சத்தின் மிகுதியால் ரயிலில் இருந்து குதித்தனர்.
