Last Updated:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன் அக்டோபர் 7ஆம் தேதி C.P.ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரையொட்டி, வரும் 7ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக தேர்வு செய்யப்பட்ட குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் இதற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி அக்டோபர் 7ஆம்தேதி மாநிலங்களவை தலைவரின் இல்லத்தில் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிகளின் கருத்தை கேட்டு, நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவதற்கு ஏதுவாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற இருப்பதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத சூழலில், அதற்கு முன்னதாகவே அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
October 03, 2025 9:56 PM IST

