15 கிலோமீட்டர் தூரம் மகன்களின் உடலோடு நடந்து செல்லவேண்டிய நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டனர். கட்சிரோலியின் சுகாதார அமைப்பு மோசமானது என்ற உண்மை மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்சிரோலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் தர்மராவ் ஆகிய இருவரும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாநிலத்தை எப்படி மேம்படுத்தப்போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
கட்சிரோலிக்கு சென்று உண்மையான கள நிலவரத்தை பார்க்கவேண்டும். ஒரு வாரத்தில் விதர்பாவில் இது இரண்டாவது சம்பவம் ஆகும். கடந்த ஒன்றாம் தேதி அமராவதி மாவட்டத்தில் உள்ள தகேந்திரி என்ற கிராமத்தில் கவிதா என்ற பழங்குடியினப் பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அரசு ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து வரும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர 4 மணி நேரம் ஆகும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதனால் வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்.
இதில் அப்பெண்ணிற்கு குறைபிரசவம் ஏற்பட்டது. அப்பெண்ணின் உடல்நிலை மோசம் அடைந்தது. கவிதா அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கிருந்து அமராவதி கொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டனர். இதனால் இருவரும் அங்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக தாய், குழந்தை என இரண்டு பேரும் இறந்துவிட்டனர். மோசமாசன சுகாதார வசதி காரணமாக இது போன்ற நிலை ஏற்பட்டது. அரசு 1,500 ரூபாய் கொடுத்து ஓட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு ஆம்புலன்ஸ் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
