Tuesday, November 3, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பள்ளியில் பந்தல் சரிந்து 30 மாணவர்கள் காயம்.. அலறித் துடித்து ஓடிய பெற்றோர்.. திருச்சியில் பரபரப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 18, 2023
in அரசியல் செய்திகள்
0
பள்ளியில் பந்தல் சரிந்து 30 மாணவர்கள் காயம்.. அலறித் துடித்து ஓடிய பெற்றோர்.. திருச்சியில் பரபரப்பு!
22
SHARES
35
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Tamilnadu oi-Vignesh Selvaraj
Updated: Saturday, June 17, 2023, 14:23 [IST]
திருச்சி: திருச்சியில் நடந்த பள்ளி விழாவின்போது, சாமியானா பந்தல் சரிந்து விழுந்து 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயமடைந்தனர். இந்த தகவல் அறிந்து பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கருமண்டபம் பகுதியில் ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். சமீபத்தில் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதற்காக அங்கு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு, அதில் அனைத்து வகுப்பு மாணவர்களும் அமர வைக்கப்பட்டு இருந்தனர். விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பலத்த காற்று வீசியதால் சாமியானா பந்தல் திடீரென சரிந்து விழுந்தது. பந்தல் போட பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் மாணவர்கள் மீது விழுந்தது. இதில் சில மாணவர்களின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் சில மாணவர்கள் பந்தலுக்குள் சிக்கி கை, கால்களில் காயம் ஏற்பட்டது. ஆசிரியர் ஒருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், பள்ளிக்கு மருத்துவக்குழுவும் வரவழைக்கப்பட்டு, லேசான காயம் அடைந்த மாணவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த ஏராளமான பெற்றோர் பள்ளி முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தங்களது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என பெற்றோர்கள் தேடினர். ஒரு சில பெற்றோர் காயம் அடைந்த தங்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தபிறகு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். மற்ற குழந்தைகளையும் விருப்பமுள்ள பெற்றோர் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு சிலர் தங்கள் குழந்தைகளை அழைத்து சென்றனர். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தகவல் அறிந்த செசன்ஸ் நீதிமன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பள்ளி ஆசிரியர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து, ஷாமியானா பந்தல் போட்ட 5 தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் கருமண்டபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
During a school function in Trichy, over 30 students were injured when a Samiana pandal collapsed. After hearing this information, parents gathered in front of the school and there was a commotion.

.

Previous Post

கல்விக் கடன் வசூலில் வங்கிகள் கெடுபிடியால் மாணவர்கள், பெற்றோர் மன உளைச்சல் – திமுக வாக்குறுதிப்படி அரசே ஏற்குமா?

Next Post

கல்வி உதவித் தொகை வழங்குவதாகக் கூறி கோவையில் மாணவர்களின் பெற்றோரிடம் ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கல்வி உதவித் தொகை வழங்குவதாகக் கூறி கோவையில் மாணவர்களின் பெற்றோரிடம் ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது

கல்வி உதவித் தொகை வழங்குவதாகக் கூறி கோவையில் மாணவர்களின் பெற்றோரிடம் ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In