Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பஞ்சு மிட்டாய பாத்தா இனி அலெர்ட் ஆவு குமாரு… குழந்தைகளுக்கு கேன்சர் வருமாம் : உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 8, 2024
in Default
0
பஞ்சு மிட்டாய பாத்தா இனி அலெர்ட் ஆவு குமாரு… குழந்தைகளுக்கு கேன்சர் வருமாம் : உணவு பாதுகாப்பு அதிகாரிகள்
13
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கடற்கரை சாலை மற்றும் சுற்றுலாத் தலங்களில் பிங்க் நிறத்தில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கக்கூடிய ரசாயனம் கலக்கப்படுவதை புதுச்சேரி உணவு பாதுகாப்புத் துறை கண்டுபிடித்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வாயில் போட்ட உடனேயே கரைந்து விடும் மெல்லிய இழையிலான பஞ்சு மிட்டாயை விரும்புவர்.

சர்க்கரையும், நிறமியும் மட்டுமே உள்ள பஞ்சு மிட்டாயில், விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் கொண்ட நிலையில், புதுச்சேரி கடற்கரை சாலையில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் இருந்த பஞ்சு மிட்டாய்களை வாங்கி சோதனை செய்துள்ளனர். அதில் ரோடமின் பி (RHODAMINE – B) என்ற விஷ நிறமி இருப்பது தெரிய வந்துள்ளது.

இது ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமி ஆகும். இதை சாப்பிடுவதால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறினர். குறைந்த விலைக்கு கிடைப்பதினால் இதனை வடமாநில இளைஞர்கள் தெரியாமல் வாங்கி, பஞ்சு மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று (பிப்7) பஞ்சு மிட்டாய் விற்பனையில் ஈடுபட்டிருந்த வட மாநில இளைஞர்களிடம் இருந்து பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புதுச்சேரியில் கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா மற்றும் பிற சுற்றுலாத் தலங்களில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்து வரும் வட மாநில இளைஞர்களைப் பிடித்து வந்து விசாரணை நடத்தியதுடன், அவர்களில் சிலர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

புதுச்சேரியில் 30 வட மாநில இளைஞர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருவது தெரிந்ததைத் தொடர்ந்து, அவர்களுடைய விவரங்களை சேகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயக் கழகம் (FSSAI) அனுமதி அளித்துள்ள அங்கீகரிக்கப்பட்ட செயற்கை நிர்ணயைப் பயன்படுத்த உணவு பாதுகாப்த்பு துறையினர் பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து தன்வந்தி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பஞ்சு மிட்டாய் விற்கும் வட மாநில இளைஞர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

Previous Post

பாஜகவுடன் கூட்டணிக்கு மறுத்த எடப்பாடிக்கு கெட்ட நேரம் துவங்கிவிட்டது – ஓபிஎஸ் பகீர்..!

Next Post

நடத்தையில் சந்தேகம் : மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற இ-சேவை மைய ஊழியர்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நடத்தையில் சந்தேகம் : மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற இ-சேவை மைய ஊழியர்!

நடத்தையில் சந்தேகம் : மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற இ-சேவை மைய ஊழியர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In