இதற்குப் பிறகு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அதில், இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் போர் நிறுத்தத்தை செயல்படுத்த பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது. இருப்பினும் சில இடங்களில் இந்தியா போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக கூறியுள்ளது. முறையான பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார். மேலும், பாகிஸ்தான் அரசாங்கம் தனது வீரர்களை நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
