Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அணு ஆயுத எச்சரிக்கை கொடுத்த பாகிஸ்தான்… பதிலடி கொடுத்த இந்தியா | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 12, 2025
in அரசியல் செய்திகள்
0
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அணு ஆயுத எச்சரிக்கை கொடுத்த பாகிஸ்தான்… பதிலடி கொடுத்த இந்தியா | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


காஷ்மீர், பஹல்காம் சுற்றுலாப்பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நான்கு பேர் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில், சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் மீது சில ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதேபோல், பாகிஸ்தானும், இந்தியா மீது சில ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதனையடுத்து இந்திய ராணுவம், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதத்தின் 9 நிலைகள் மீது தாக்குதல் நடத்தி அதனை அழித்தது. பின்னர், இந்திய எல்லைகள் அருகே இருந்த கிராமங்களின் மீது பாகிஸ்தான் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி அழித்தது.

இந்தியா, பாகிஸ்தான் மீது எடுத்த ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளில் முக்கியமானது, சிந்து நீர் ஒப்பந்தம் நிறுத்தம். இதனால், பாகிஸ்தானின் நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தினாலும், அங்கு எந்த பெரிய அணையும் இல்லாததால் பெரும் அளவில் நீரை இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால், சிந்து நதியின் குறுக்கே இந்தியா தடுப்பணை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், “இந்தியா சிந்து நதியின் குறுக்கே அணை கட்டினால், அணு ஆயுதம் கொண்டு அதனை தகர்ப்போம். பாகிஸ்தான் அணு ஆயுதம் கொண்ட நாடு. நாங்கள் வீழ்ச்சி அடைகிறோம் என நினைத்தால், பாதி உலகத்தை சேர்த்து வீழ்த்துவோம்” என பேசியுள்ளார்.

இந்தியா சிந்து நதியின் குறுக்கே அணை கட்டினால், அதனை அணு ஆயுதம் கொண்டு தகர்ப்போம் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்காவில் பேசியிருப்பது பெரும் பேசுபொருளாக மாறியது.

இதற்கு பதில் அளித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், பாகிஸ்தான் அணு ஆயுதங்களை வைத்து அச்சுறுத்துவது வழக்கமானது. இதுபோல் பொறுப்பில்லாத கருத்துகளைக் கூறும் பாகிஸ்தானின் தன்மை குறித்து சர்வதேச சமூகம் தங்களது முடிவுகளை எடுக்கலாம். அணு ஆயுதத்தை வைத்திருக்கும் பாகிஸ்தானின் இதுபோன்ற கருத்துகள், அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

பயங்கரவாதக் குழுக்களுடன் ராணுவம் கைகோர்த்துச் செயல்படும் நிலையில், இது கவலையளிக்கிறது. அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. தேசியப் பாதுகாப்பைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 11, 2025 4:54 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அணு ஆயுத எச்சரிக்கை கொடுத்த பாகிஸ்தான்… பதிலடி கொடுத்த இந்தியா



.

Previous Post

அரசியலில் என்னுடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது!” – சொல்கிறார் பிரேமலதா | Premalatha Says: “No One Can Replace My Position in Politics

Next Post

பறை, தவில் இசை, பாரம்பர்ய கிராமிய கலை நிகழ்ச்சியுடன் களைகட்டிய பாமக மகளிர் மாநாடு | Photo Album

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பறை, தவில் இசை, பாரம்பர்ய கிராமிய கலை நிகழ்ச்சியுடன் களைகட்டிய பாமக மகளிர் மாநாடு | Photo Album

பறை, தவில் இசை, பாரம்பர்ய கிராமிய கலை நிகழ்ச்சியுடன் களைகட்டிய பாமக மகளிர் மாநாடு | Photo Album

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In