Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது- விங் கமாண்டர் வியோமிகா சிங்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 10, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது- விங் கமாண்டர் வியோமிகா சிங்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பாகிஸ்தான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது என்று விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் அளித்த விளக்கத்தில், இந்தியா எந்தவொரு வழிபாட்டுத் தலங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை. இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வந்த முகாம்களை மட்டுமே தாக்கினோம்.

இந்தியாவின் இந்த தாக்குதல்களால் பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். இதற்கு கடந்த 7-ஆம் தேதி இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது.

இந்த ராணுவத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியானதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தான் கடந்த 3 நாள்களாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது.

ஆனால், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் அந்த முயற்சி திறம்பட முறியடிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் அத்துமீறலால் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் நிலவி வந்தது. இந்தச் சூழலில் போரை நிறுத்த இந்தியா- பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிக்க அதிபர் டிரம்ப் சனிக்கிழமை அறிவித்தார்.

அதனை இந்திய தரப்பும் பாகிஸ்தான் தரப்பும் உறுதி செய்துள்ளது.

ராணுவ நடவடிக்கையை நிறுத்த இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்: ஜெய்சங்கர்



.

Previous Post

India – Pakistan: `அனைத்து தாக்குதல்களும் நிறுத்தம்' – அறிவித்த இந்தியா… முடிவுக்கு வரும் மோதல்?

Next Post

மூர்வர்ணக் கொடி ஏந்தி முதலமைச்சர் ஸ்டாலின் பேரணி! இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மூர்வர்ணக் கொடி ஏந்தி முதலமைச்சர் ஸ்டாலின் பேரணி! இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவு!

மூர்வர்ணக் கொடி ஏந்தி முதலமைச்சர் ஸ்டாலின் பேரணி! இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In