Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Pahalgam Attack : “இது போரின் முடிவு அல்ல; ஒவ்வொரு நபருக்கும் தகுந்த பதில் அளிக்கப்படும்” – உறுதியாக சொன்ன அமித்ஷா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 1, 2025
in அரசியல் செய்திகள்
0
Pahalgam Attack : “இது போரின் முடிவு அல்ல; ஒவ்வொரு நபருக்கும் தகுந்த பதில் அளிக்கப்படும்” – உறுதியாக சொன்ன அமித்ஷா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 01, 2025 7:32 PM IST

“பயங்கரவாதத்தைப் பரப்பும் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது, இது போரின் முடிவு அல்ல; ஒவ்வொரு நபருக்கும் தகுந்த பதில் அளிக்கப்படும்” என அமித்ஷா தெரிவித்தார்.

News18News18
News18

அசாமில் உள்ள போடோ சமூகத்தின் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததற்காக போடோபா உபேந்திரநாத் பிரம்மா நினைவுகூரப்படுகிறார். டெல்லியில் இவருக்கு சிலை நிறுவப்பட்டது. அதன் திறப்பு விழாவும், மேலும், சாலைக்கு அவரது பெயர் வைக்கப்பட்ட நிகழ்வும் இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர், “பயங்கரவாதத்தைப் பரப்பும் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது, இது போரின் முடிவு அல்ல; ஒவ்வொரு நபருக்கும் தகுந்த பதில் அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

விழாவில் அவர் பேசியதாவது; “கைலாஷ் காலனியில் போடோபாவை கௌரவிக்கும் வகையில் சிலையைத் திறந்து வைக்கவும் சாலைக்கு அவரது பெயரை சூட்டும் வாய்ப்பும் இன்று எனக்குக் கிடைத்திருப்பது, எனது அதிர்ஷ்டம். இந்த சிலை போடோ சமூகத்திற்கு மட்டுமல்ல, தங்கள் மொழி, கலாச்சாரம் மற்றும் வளர்ச்சிக்காகப் போராடிய அனைத்து சிறிய பழங்குடியினருக்கும் முக்கியமானது. போடோபாவின் சிலை போடோ சமூகத்தின் மரியாதையை மட்டுமல்ல, அத்தகைய அனைத்து சிறிய பழங்குடியினரின் மரியாதையையும் அதிகரிக்கிறது.

90களில் இருந்து காஷ்மீரில் பயங்கரவாதத்தை நடத்தி வருபவர்களுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையின் அடிப்படையில் நாங்கள் கடுமையாகப் போராடி வருகிறோம். இன்று, பயங்கரவாதிகள் நமது குடிமக்களின் உயிரைப் பறிப்பதன் மூலம் போரில் வெற்றி பெற்றுவிட்டதாக நினைக்கக்கூடாது. பயங்கரவாதத்தைப் பரப்பும் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது, இது போரின் முடிவு அல்ல; ஒவ்வொரு நபருக்கும் தகுந்த பதில் அளிக்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், வடகிழக்கு, இடதுசாரி தீவிரவாதத்தின் பகுதிகள் அல்லது காஷ்மீரில் பயங்கரவாதத்தின் நிழல் என அனைத்திற்கும் நாங்கள் வலுவான பதிலடி கொடுத்துள்ளோம். கோழைத்தனமான தாக்குதலை நடத்துவதன் மூலம் அது அவர்களின் பெரிய வெற்றி என்று யாராவது நினைத்தால், இது நரேந்திர மோடி அரசு என்பதை புரிந்து கொள்ளுங்கள், யாரும் தப்பிக்க மாட்டார்கள். இந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலிருந்தும் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்குவதே எங்கள் உறுதி.

இந்தப் போராட்டத்தில் 140 கோடி இந்தியர்கள் மட்டுமல்ல, முழு உலகமும் இந்தியாவுடன் நிற்கிறது, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்திய மக்களுடன் நிற்கின்றன. பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை, நமது போராட்டம் தொடரும், அதைப் புரிந்தவர்களுக்கு நிச்சயமாக தகுந்த தண்டனை வழங்கப்படும் என்ற உறுதியை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

Pahalgam Attack : “இது போரின் முடிவு அல்ல; ஒவ்வொரு நபருக்கும் தகுந்த பதில் அளிக்கப்படும்” – உறுதியாக சொன்ன அமித்ஷா



.

Previous Post

உழைப்பாளர் தின வாழ்த்து: தொழிலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவின் புது யுக்தி!

Next Post

’கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது! டன்னுக்கு 5 ஆயிரம் வேண்டும்!’ ராமதாஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது! டன்னுக்கு 5 ஆயிரம் வேண்டும்!’ ராமதாஸ்!

’கரும்பு கொள்முதல் விலை ரூ.139 மட்டும் உயர்த்துவது போதாது! டன்னுக்கு 5 ஆயிரம் வேண்டும்!’ ராமதாஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In