Last Updated:
பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி குறித்து டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து ஆலோசிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அரசு உடனான உறவை இந்தியா முறித்துக் கொண்ட நிலையில் டெல்லியில் அனைத்து கூட்டம் நடைபெற்றது. இதில் பல்ஹாம் தாக்குதலை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சிந்து நதி பகர்வு ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, வாக எல்லை மூடல் என மத்திய அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பாகிஸ்தானும் இந்திய விமானங்கள் தங்கள் வான்வழியில் பறக்க தடை, சிம்லா ஒப்பந்தம் ரத்து என அறிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிகள் கூட்டம் தொடங்கியது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து கட்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதான கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். திமுக சார்ப்பில் திருச்சி சிவா இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பஹால்காம் துப்பாக்கி சூட்டின் போது நடந்தது என்ன? அதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க உள்ளது. இதையடுத்து மத்திய அரசின் கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகள் கருத்துகளை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தின் ஆரம்பத்திலேயே பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து, சிந்து நிதி ஒப்பந்தம் ரத்து குறித்தும் அதன் தாக்கம் குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எதிர்கட்சிகளுக்கு விளமக்களிக்க உள்ளார். சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் மிக முக்கியமாக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தான் முக்கிய ஆலோசனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் பதிலடி இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் பாகிஸ்தான் அரசுக்கே இருக்க வேண்டுமென்றும் சாமானிய மக்கள் இதனால் பாதிக்க கூடாது என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
April 24, 2025 6:52 PM IST

