Last Updated:
பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களின் குழந்தைகளுக்கு லக்னோ பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காஷ்மீரின் பிரபல சுற்றுலாதளமான பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளின் இந்தக் கொடூர தாக்குதலில், உள்ளூர் குதிரையோட்டி உட்பட 27 நபர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டார்கள். இதில், 26 நபர்களும் காஷ்மீர் சுற்றுலாவுக்குவந்தவர்கள்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக வைத்து இயங்கிவரும் லஷ்கர்-இ-தொய்பாவின் இணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் அமைப்பு முதலில் பொறுப்பேற்றது. பிறகு அந்த அமைப்பு இதனை மறுத்தது. அதேபோல், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு அரசுகளும் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்தத் தாக்குதலில் பலியாகியுள்ளவர்களுக்கு, மாநில அரசுகள் நிதியுதவி அறிவித்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவின் முதல் கல்வி நிறுவனமாக உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் லக்னோ பல்கலைக்கழகம் பலியானவர்களின் குழந்தைகளுக்கு உதவிகரம் நீட்டியுள்ளது. இது பெரிதும் கவனிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ பல்கலைக்கழக துணை வேந்தர் அலோக் ராய் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களைச் சார்ந்தவர்கள் தங்கள் பல்கலைக்கழகத்தில் இலவசமாக பயிலலாம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுக்கு கட்டணமில்லா கல்வி, தங்குமிடம் மற்றும் புத்தகம் ஆகியவை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
April 30, 2025 4:20 PM IST
Pahalgam Attack : லக்னோ பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… பலியானவர்களின் குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பு

