17 செப்டம்பர் 2024
லெபனானில் சூப்பர் மார்க்கெட் தொடங்கி மக்கள் கூடுகின்ற பல இடங்களில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்துச் சிதறின. இதில் 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சுமார் 40 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, ஹிஸ்பொல்லா அமைப்பின் அப்போதைய தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ், “இஸ்ரேல் நம்மை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதனால் நம் அமைப்பினர் யாரும் செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்’ என்று உத்தரவிட்டிருந்தார். இதையொட்டியே, ஹிஸ்பொல்லா அமைப்பினர் செல்போனில் இருந்து பேஜருக்கு மாறியிருந்தனர்.