சீமான் கூறும் இந்தக் கருத்துகளில் உடன்படுவதாகவும், அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பெரியார் தொடர்பான கருத்துகளை ஆதரித்து வருகிறார். தமிழக அரசியலில் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிற இந்த விவகாரம் குறித்து தி.மு.க-வின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் நேற்று இரவு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது காட்டமாக பேசியிருக்கிறார். “பெரியார் பற்றி அவதூறு பேசுகிறவர்களின் பிறப்பையே நான் சந்தேகப்படுகிறேன்’’ என்று ஒற்றை வார்த்தையில் சீமானையும், அண்ணாமலையையும் கடுமையாக தாக்கிப் பேசினார் துரைமுருகன்.

துரைமுருகனின் இந்த விமர்சனத்துக்கு கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து உடனடியாக பதிலடி கொடுத்திருக்கிறார் அண்ணாமலை. “பெரியாருக்கும் நிகழ்கால தமிழகத்திற்கும், எவ்வித தொடர்பும் இல்லை. இவர்கள் எப்போதோ கட்டமைத்திருக்கின்ற ஒரு பிம்பத்தை வைத்து அரசியல் செய்கின்றனர். ஒரு பலூனை எவ்வளவு ஊதினாலும் ஒருநாள் அது உடையத்தான் போகிறது.
