Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`ராமச்சந்திரனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும்!’ – வலியுறுத்தும் படுகர் சமுதாய சங்கங்கள் | padugar community people urging govt to include ramachandran again in cabinet

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2024
in அரசியல் செய்திகள்
0
`ராமச்சந்திரனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும்!’ – வலியுறுத்தும் படுகர் சமுதாய சங்கங்கள் | padugar community people urging govt to include ramachandran again in cabinet
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகத்தின் அரசு தலைமை கொறடாவாக தற்போது நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள இளித்தொரை கிராமத்தைச் சேர்ந்தவர். படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், கருணாநிதி ஆட்சியின்போது கதர்வாரியத்துறை அமைச்சராக தேர்வானதன் மூலம் படுகர் சமுதாயத்தில் முதன்முதலாக அமைச்சராகப் பதவியேற்றவர் என்ற பெருமையைப் பெற்றார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சொந்த தொகுதியான குன்னூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராமச்சந்திரனுக்கு முதவ்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் வனத்துறை வழங்கப்பட்டது. அடுத்து நிகழ்ந்த அமைச்சரவை மாற்றத்தின்போது சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போது ஏற்பட்டிருக்கும் அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, அரசு தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். தங்கள் சமுதாயத்தில் முதன் முதலாக அமைச்சரான ராமச்சந்திரனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்கு படுகர் சமுதாய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ராமச்சந்திரன் ராமச்சந்திரன்

ராமச்சந்திரன்

படுகர் சமுதாய மக்களின் அமைப்புகளில் ஒன்றான இளம் படுகர் சங்க நிர்வாகிகள் சிலர் பேசுகையில், “நீலகிரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டுள்ள படுகர் சமுதாய மக்கள் இந்த மண்ணின் பெரும்பான்மை மக்களாக உள்ளனர். பசுந்தேயிலைக்கான உரிய விலை முதல் பழங்குடி அந்தஸ்து வரை பல்வேறு கோரிக்கைகளும் தேவைகளும் எங்கள் மக்களுக்கு இருக்கிறது. ராமச்சந்திரனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது எங்கள் மக்களுக்கான முக்கியத்தை இழந்ததாக கருதுகிறோம். எனவே, மீண்டும் அவருக்கு பதவி வழங்க வேண்டும். படுகர் சமுதாய மக்களை‌ ஒன்றுதிரட்டி அதற்கான கூட்டத்தை நடத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் ” என்றனர்.



.

Previous Post

Indian AirForce Day 2024: உயரப் பறந்த விமானங்கள்; நடுவானில் சாகசங்கள்; வியக்கவைத்த விமானப் படையினர் | Indian AirForce Day 2024: Flying Squads magical Strikes in the sky

Next Post

ரூபாய் நோட்டிற்குள் காந்தி எப்படி, எப்போது வந்தார் தெரியுமா? – வரலாறும், பின்னணியும் !

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரூபாய் நோட்டிற்குள் காந்தி எப்படி, எப்போது வந்தார் தெரியுமா? – வரலாறும், பின்னணியும் !

ரூபாய் நோட்டிற்குள் காந்தி எப்படி, எப்போது வந்தார் தெரியுமா? - வரலாறும், பின்னணியும் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In