இப்படியான கடும் எதிர்ப்புகள் வந்ததால், ‘OYO’ நிறுவனம் மீரட்டில் இருக்கும் தங்களின் ஹோட்டலில் திருமணமாகாத ஜோடிகளுக்கு அனுமதியில்லை என்ற புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு இந்தியா முழுவதும் இருக்கும் பிற மாநிலங்களிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாகப் பேசியிருக்கும் ‘OYO’ நிறுவனத்தின் துணைத் தலைவர் பவாஸ் ஷர்மா, “நாங்கள் எங்கள் விடுதியில் தங்கும் மக்களின் பாதுகாப்பிற்கும், சுதந்திரத்திற்கும் எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அதேபோல மக்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கும், தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் மதிப்பளிக்கிறோம். அதன் அடிப்படையிலேயே நிறுவனத்தை நடத்தி வருகிறோம். அதேசமயம் சமூகப் பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. சமீபத்தில் சில அமைப்புகள், குழுக்கள் அந்தச் சமூகப் பொறுப்புடன் சில கோரிக்கைகளை எங்களிடம் முன்வைத்தன. அதை ஏற்றுக்கொண்டு புதியக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகிறோம்” என்றார்.
‘OYO’வின் இந்தப் புதியக் கட்டுப்பாடுகளைப் பலரும் பாராட்டி, வரவேற்று வருகின்றனர். மற்றொரு தரப்பினர், ‘மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். OYO- வின் இந்தக் கட்டுப்பாடுகள் வரவேற்க்கத்தக்கது அல்ல’ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
‘OYO’வின் இந்தப் புதியக் கட்டுப்பாடுகள் குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடவும்.
