தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல் அதிகாரிகள் மீது துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரங்களை இதுவரை தங்களிடம் வழங்கவில்லை என மனுதார தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான அறிக்கை தயாராகிவிட்டதாகவும், அடுத்த விசாரணைக்கு முன்பு மனுதாரரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது


கருத்து சொல்ல விரும்பவில்லை
இந்த வழக்கு சம்பந்தமான மனுதாரருக்கு எனது வாழ்த்துக்கள் அதேநேரம் நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன்
இந்த வழக்கின் மனுதாரருக்கு எனது வாழ்த்துக்கள் நீதிமன்ற உத்தரவு வரவேற்கிறேன்